ஐபிஎல்-லில் டெல்லி கேபிடல்ஸ் ஒரு சிறந்த டீமாக இருந்தாலும் அதற்கு அதிர்ஷ்டம் கைகூடவில்லை. ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, டேவிட் வார்னர் போன்ற துடிப்பான வீரர்களைக் கொண்டிருந்தாலும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இதுவரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வாய்க்கவில்லை.
2008 ஆம் ஆண்டில் டெல்லி அணியை ஜிஎம்ஆர் குரூப் ரூ.702 கோடிக்கு விலைக்கு வாங்கியது. 2018 மார்ச் மாதத்தில் ஜிஎம்ஆர் குரூப் அணியின் பங்கில் 50 சதவீதத்தை ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு தாரை வார்த்தது. அதன் பின்னர் டெல்லி அணியின் புதிய சகாப்தம் தொடங்கியது.

அதே 2018இல் டெல்லி டேர் டெவில்ஸ் என்றிருந்த பெயரை டெல்லி கேபிடல்ஸ் என்று அணியின் இணை உரிமையாளரும் தலைவரமான பார்த் ஜிண்டால் மாற்றினார். 2022 வரை டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல்லின் ஐந்தாவது சிறந்த அணியாகத் திகழ்ந்தது. அதன் மதிப்பு ரூ.8000 கோடியாக ஆனது.
1990 மே 19 ஆம் தேதி பிறந்த பார்த் ஜிண்டால் டெல்லி அணியை வழிநடத்தினார். ஜேஎஸ்டபிள்யூ குரூப் தலைவர் சஜ்ஜன் ஜிண்டாலின் மகன் பார்த் ஜிண்டால். மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானன் ஸ்கூலில் பார்த் ஜிண்டால் பள்ளிப்படிப்பை முடித்தார்.
பின்னர் இங்கிலாந்தில் உள்ள செவனோக்ஸ் ஸ்கூலில் படித்தார். 2012இல் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பிஏ பொருளாதாரம் மற்றும் பொலிட்டிகல் சயின்ஸ் பட்டப்படிப்பை முடித்தார்.
அதன் பின்னர் ஜேஎஸ்டபிள்யூ குரூப்பில் 2012இல் ஒரு எக்கனாமிக் அனலிஸ்ட்டாக வேலைக்குச் சேர்ந்தார். பார்த் ஜிண்டாலின் முன்னேற்றம் ஜப்பானில் உள்ள ஜேஎப்இ ஸ்டீலில் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் உள்ள ஃபால்கன் எட்ஜ் கேபிட்டல் நிறுவனத்தில் பணியாற்றினார். ஜேஎஸ்டபிள்யூ குரூப்பில் அவர் பல்வேறு துணை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கை ஆற்றினார்.
பெல்லாரி, விஜயநகர் ஆகிய இடங்களில் 2.3 மில்லியன் டன் ஆட்டோ கிரேடு ஸ்டீல் ஆலையைத் தொடங்குவதில் மும்முரமாகச் செயல்பட்டார். இது இந்திய ஸ்டீல் உற்பத்தித் துறையில் புதிய அத்தியாயத்தை அமைத்தது. பின்னர் அவர் 2014 இல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார். இதன் மூலம் அவர் தனது தொழில் முனைப்பை கூராக்கினார்.
ஜேஎஸ்டபிள்யூ சிமெண்ட்டின் நிர்வாக இயக்குநராக 2014 ஜூனில் பார்த் ஜிண்டால் பதவியேற்றார். அத்துடன் ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸையும் அவர் வழிநடத்தினார். அவரது உத்தியினால் இந்தியன் சூப்பர் லீகில் பெங்களூரு எஃப்சி, ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ், புரோ கபடியில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் ஆகியவற்றை திறம்பட நடத்தினார்.
அத்துடன் தனது கார்ப்பொரேட் பணிகளுடன் அவர் இன்ஸ்பையர் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தொலைநோக்கு சிந்தனையுள்ள நிறுவனராக ஆனார். 2018இல் 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த நிறுவனம் இந்தியத் தடகள வீரர்களின் திறமையை வளர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது.
ஜிண்டால் குடும்பத்தின் நிகர மதிப்பு 7.68 பில்லியன் டாலர்கள் (தோராயமாக ரூ. 64,000 கோடி), ஃபோர்ப்ஸ் படி, பார்த் ஜிண்டாலின் சொத்து மதிப்பு ரூ. 600 கோடி. அவரது புத்திசாலித்தனமான வணிகத் திறமை அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.
பார்த் ஜிண்டால் இந்திய தொழில்முனைவோர் துறையில் ஒரு விடிவெள்ளியாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தும் ஆற்றல்மிக்க சக்தியாகவும் விளங்குகிறார்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications