இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகளை மேலாண்மை செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த சுங்க கட்டணம் செலுத்தும் நடைமுறையில் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு விட்டன.
சுங்கச்சாவடிகளில் நாம் வாகனத்தை நிறுத்தி பணத்தை கொடுத்து மீதி சில்லறை வாங்க வேண்டும் என்று அவசியமே கிடையாது. தானாகவே நம்முடைய வாகனத்தில் இருக்கும் ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு சுங்க கட்டணம் தானாகவே வசூல் செய்யப்பட்டு விடும். இதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கக்கூடிய நேரம் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்த சூழலில் தான் மத்திய அரசு வரும் 15ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை தொடங்கி சுங்க கட்டண வசூல் விதிமுறையில் ஒரு முக்கியமான மாற்றத்தை நடைமுறைக்கு கொண்டு வருகிறது.

அது என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இந்த புதிய மாற்றத்தின் மூலம் உங்களுக்கான சுங்க கட்டணம் கணிசமான அளவு குறைய உள்ளது. இதன்படி நீங்கள் ஒரு விரைவு சாலை அதாவது எக்ஸ்பிரஸ்வேக்களில் பயணம் செய்கிறீர்கள் அந்த சாலை இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கே வரவில்லை. பாதி கட்டுமான முடிந்திருக்கிறது, பாதி கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிறது அதில் கட்டுமான முடிந்த ஒரு பகுதி அளவு சாலையில் தான் நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் அந்த முழு சாலைக்குமான சுங்க கட்டணத்தை நீங்கள் செலுத்த தேவையில்லை. குறைந்தபட்ச சுங்க கட்டணத்தை(தேசிய நெடுஞ்சாலைக்கு வசூல் செய்யப்படும் கட்டணம்) மட்டுமே இனி வசூல் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 15ஆம் தேதியிலிருந்து இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை கட்டணம் நிர்ணயம் மற்றும் வசூல் 2008 விதிகளை இதற்காக மத்திய அரசு திருத்தி அமைத்துள்ளது. இந்த புதிய விதிமுறையின் கீழ் ஒரு தேசிய விரைவுச் சாலை தொடக்கத்திலிருந்து இறுதிவரை முழுமையாக திறக்கப்படாமல் இருக்கிறது எனும் போது பகுதி அளவு சுங்க கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். இதுவரை பல இடங்களில் பகுதி அளவு முடிக்கப்பட்ட விரைவு சாலைகளில் கூட முழு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரிய அளவில் சுமையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த புதிய விதிமுறை நிம்மதி தந்துள்ளது.

இதன் மூலம் விரைவுச் சாலையின் செயல்பாட்டு பகுதிகளை பயன்படுத்த அதிகமான வாகன ஓட்டிகள் முன் வருவார்கள். இதனால் பழைய தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் மற்றும் சரக்கு வாகனங்கள் இந்த விரைவு சாலைகளை நோக்கி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான தேசிய நெடுஞ்சாலைகளை காட்டிலும் விரைவு சாலைகளில் 25 சதவீதம் அதிகமாக தான் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
பெரும்பாலான விரைவு சாலைகள் இன்னும் பணி முடிந்து பயன்பாட்டுக்கே வராத சூழலிலும் சுங்க கட்டணத்தை முழுமையாக வசூல் செய்கிறார்கள் இந்த புதிய விதிமுறை அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. எனவே விரைவுசாலை முழுமையாக செயல்பாட்டுக்கு வராத போது உதாரணத்திற்கு சென்னை பெங்களூரு விரைவு சாலையில் முடிக்கப்பட்ட பகுதிகளை பயன்படுத்தும் போது முன்பை விட 25% குறைவாக கட்டணம் செலுத்தினால் போதும்.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications