டெல்லி யூனியன் பிரதேசத்தின் 70 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நடெல்லி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டார். அதேசமயம் இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டுcdஎன்பதில் தீவிரமாக இருந்த பாஜக 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி சவால் விடும் வகையில் வலுவான வேட்பாளர்களை நிறுத்தியது.
குறிப்பாக, டெல்லி சட்டப்பேரவை தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பாராத வண்ணம் பர்வேஷ் சாஹிப் சர்மாவை வேட்பாளராக பாஜக நிறுத்தியது. கடந்த 5ம் தேதியன்று டெல்லி தொகுதி உள்பட 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னணியில் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பாஜக 47 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 23 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் வர்மாவிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி கண்டுள்ளார். இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா ஒரு முக்கியமான ஜாட் தலைவர். இரண்டு முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பர்வேஷ் வர்மாவின் குடும்பம் ஒரு அரசியல் பாரம்பரிய கொண்ட குடும்பமாகும். இவரது தந்தை சாஹிப் சிங் வர்மா முன்னாள் பாஜக தலைவர் மற்றும் டெல்லி முதல்வராகவும் இருந்தவர். பர்வேஷ் வர்மாவின் மாமா ஆசாத் சிங், வடக்கு டெல்லி மாநகராட்சி மேயராக பணியாற்றியவர். மேலும் 2013 தேர்தலில் முண்ட்கா தொகுதியில் அவர் போட்டியிட்டார்.1977ல் பிறந்த பர்வேஷ் வர்மா தனது ஆரம்ப கல்வியை ஆர்கே புரத்தில் உள்ள டெல்லி அரசு பள்ளியில் கற்றார். கிரோரி மால் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

பர்வேஷ் வர்மா வேட்புமனு தாக்கல் செய்யும் போது, தனது தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.89 கோடி என்று தெரிவித்து இருந்தார். அவரது மனைவி ஸ்வாதி சிங்கின் நிகர சொத்து மதிப்பு ரூ.24.4 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது கையில் ரொக்கமாக ரூ.2.2 லட்சமும், மனைவியிடம் ரொக்கமாக ரூ.50,000 இருப்பதாகவும் பர்வேஷ் வர்மா தெரிவித்து இருந்தார்.
மேலும் பங்குகள் மற்றும் பத்திரங்களில் மொத்தம் ரூ.52.75 கோடி முதலீடு செய்துள்ளார். மேலும் இவருக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான காப்பீடும், மனைவி பெயரில் ரூ.5.5 லட்சம் மதிப்பிலான பாலிசிகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் டொயோட்டா பார்ச்சூனர், இன்னோவா மற்றும் மகிந்திரா எக்ஸ்யூவி உள்ளிட்ட கார்கள் உள்ளதாகவும், ரூ.8.25 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கமும் உள்ளதாக பர்வேஷ் வர்மா குறிப்பிட்டுள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications