சென்னை: நம்முடைய திரை உலகில் நாம் காணக்கூடிய நட்சத்திரங்களில் பலரும் தனிப்பட்ட முறையில் திரைத்துறை தாண்டி பல துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். அப்படித்தான் பசங்க திரைப்படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மனதை ஈர்த்த நடிகர் ஸ்ரீராம், கார்பன் வெளியீட்டிலிருந்து பூமியை பாதுகாக்க கூடிய ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் பசங்க திரைப்படம் வெளியானது. சசிகுமார் தயாரித்திருந்த இந்த படத்தில் விமல், கிஷோர் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீராம் என்ற சிறுவன் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அப்போது பலராலும் ரசிக்கப்பட்டது. இந்த படத்திற்காக ஸ்ரீராமுக்கு தேசிய விருது கூட கிடைத்தது.

ஜீவா கதாபாத்திரத்தில் ஸ்ரீராமின் நடிப்பு பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. பசங்க திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் முடிவடைந்து இருக்கின்றன இந்த நிலையில் இதில் நடித்த சிறுவர்கள் அனைவருமே தற்போது பெரிய இளைஞர்களாக வளர்ந்து விட்டனர். பசங்க திரைப்படத்திற்கு பின்னர் பல திரைப்படங்களிலும் தோன்றிய நடிகர் ஸ்ரீராம் , நடிகர் என்பதை தாண்டி இந்த பூமியை பாதுகாக்கும் வகையில் ஒரு பயோடெக் நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் .
கார்பன் வெளியீடு அதிகரித்ததன் காரணமாக புவி வெப்பமயமாவது அதிகரித்து வருகிறது, இதனால் புவியில் பருவநில மாற்றங்கள் ஏற்படுகின்றன . இந்த பூமியில் மனிதர்கள் தொடர்ந்து உயிர் வாழ வேண்டும் என்றால் கார்பன் வெளியீட்டை குறைக்க வேண்டும் என தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர். பல்வேறு நாடுகளின் அரசுகளும் தங்களால் இயன்ற அளவு கார்பன் வெளியீட்டை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இப்படி கார்பன் வெளியிட்டை குறைப்பதற்கான ஒரு பயோடெக் நிறுவனத்தை தான் இவர் நடத்தி வருகிறார். Aatrel என்ற பெயரில் இவர் நடத்திவரக்கூடிய பயோ டெக் நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் செயல்பட்டு வருகிறது. 2050 ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் கார்பன் வெளியிட்டை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது .
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஸ்ரீராம் இயங்கி வருகிறார் . இந்த நிறுவனம் பாசியை அடிப்படையாகக் கொண்டு எப்படி மின்சாரம் தயாரிப்பது , பாசி அடிப்படையிலான பல்வேறு தொழில்நுட்பங்கள் சம்பந்தப்பட்ட பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குகிறது. இது தவிர கழிவு நீர் மேலாண்மை சம்பந்தப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications