இந்தியாவில் சுமார் 7 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்டோ மொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Automobile Dealers Associations ) சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் டீலர்களிடம் விற்பனையாகாமல் லட்சக்கணக்கான பயணிகள் வாகனங்கள் தேங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 73,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 7 லட்சம் வாகனங்கள் விற்பனையாகாமல் டீலர்களிடமே தேங்கியுள்ளன. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக இவ்வளவு வாகனங்கள் தேங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக டீலர்ஷிப் நிறுவனங்கள் வாகனங்களை வைத்திருக்கும் காலம் 65 முதல் 67 நாட்களாக இருந்த நிலையில் தற்போது அதனை 70 முதல் 75 நாட்களாக உயர்த்தியுள்ளன. இருந்தாலும் வாகன விற்பனை சரிவிலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இலட்சக்கணக்கான வாகனங்கள் தங்கள் கைவசம் இருக்கும் நிலையில் புதிதாக அறிமுகமாகும் மாடல்களை வாங்கி வைத்து விற்பனை செய்வதும் சவாலாக இருக்கிறது என டீலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆட்டோ மொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான மனிஷ் ராஜ் சிங்கானியா இது தொடர்பாக வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர்கள் தரப்பில் வாகன உற்பத்தியை குறைக்கும் படி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
டீலர்களிடம் லட்சக்கணக்கான வாகனங்கள் தேங்கியிருப்பதாக சொல்லப்பட்டாலும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் விற்பனை 10% அதிகரித்துள்ளது. அதாவது ஜூலை மாதத்தில் மட்டும் 3,20,129 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் அதே காலகட்டத்தில் பயணிகள் வாகனங்கள் ஹோல்சேல் முறையில் விற்பனை செய்யப்படுவது 2.5% குறைந்துள்ளது.எனவே டீலர்களுக்கு உதவி செய்யும் வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியையும் ஹோல்சேல் விற்பனையையும் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
டீலர்களிடம் லட்சக்கணக்கான வாகனங்கள் தேங்கிருப்பதாக சொல்லப்பட்டாலும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் விற்பனை 10% அதிகரித்துள்ளது. அதாவது ஜூலை மாதத்தில் மட்டும் 3,20,129 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் அதே காலகட்டத்தில் பயணிகள் வாகனங்கள் ஹோல்சேல் முறையில் விற்பனை செய்யப்படுவது 2.5% குறைந்துள்ளது.எனவே டீலர்களுக்கு உதவி செய்யும் வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியையும் ஹோல்சேல் விற்பனையையும் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications