கொரோனா வைரஸ் தாக்கம்.. முடங்கிப் போன ஏற்றுமதி.. சரிவில் பயணிகள் வாகன விற்பனை..!

சமீப மாதமாக தான் கொரோனாவின் தாக்கம் இருந்தாலும், வாகன விற்பனையானது துளிர் விடத் தொடங்கியுள்ளதாக வாகன நிறுவனங்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளன.

எனினும் பயணிகள் வாகன விற்பனையானது சற்று சரிவிலேயே இருப்பதாக கூறுகின்றது சியாம் தரவுகள்.

இது குறித்து வெளியான பிசினஸ் டுடே செய்தியில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் - முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் பயணிகள் வாகன விற்பனையானது முடங்கி போயுள்ளது. பயணிகள் வாகன ஏற்றுமதியானது இந்த காலகட்டத்தில் 57.52% வீழ்ச்சி கண்டுள்ளது. இது குறித்து சியாம் வெளியிட்டுள்ள தரவில், கடந்த ஆண்டில் பாதியில் 3,65,247 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எனினும் நடப்பு ஆண்டின் பாதியில் 1,55,156 வாகனங்கள் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கம்.. முடங்கிப் போன ஏற்றுமதி.. சரிவில் பயணிகள் வாகன விற்பனை..!

குறிப்பாக பயணிகள் கார் ஏற்றுமதி 64.93% சரிவினைக் கண்டுள்ளது. இதே பயன்பாட்டு வாகன ஏற்றுமதியும் 26.67% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே வேன் ஏற்றுமதியானது 80.91% குறைந்துள்ளது.

இதில் பயணிகள் கார் ஏற்றுமதியானது 1,00,529 வாகனங்களாகவும், இது கடந்த ஆண்டு 2,86,618 வாகனங்களாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே பயன்பாட்டு வாகன ஏற்றுமதி 54,375 வாகனங்களாகவும், இதே கடந்த ஆண்டு 77,309 வாகனங்களாகவும் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வேன் ஏற்றுமதி 252 வாகனங்களாகவும், இது கடந்த ஆண்டில் 1,320 வாகனங்களாகவும் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சரிவானது கொரோனாவால் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் சப்ளை செயின் மற்றும் டீலர்ஷிப் பாதிப்பு உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இதே இரண்டாவது காலாண்டில் பயணிகள் வாகன ஏற்றுமதியானது 41.96% சரிந்து, 1,11,555 வாகனங்களாக குறைந்துவிட்டது. இது கடந்த ஆண்டு 1,92,193 வாகனங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் ஏற்றுமதி 68.98% வீழ்ச்சி கண்டு, 32,041 வாகனங்களாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதே மாருதி சுசூகி இந்தியாவின் ஏற்றுமதி 40.02% குறைந்து, 31,549 வாகனங்களாகவும் செய்யப்பட்டுள்ளது. இதே போர்டு இந்தியாவின் ஏற்றுமதி 63.69% குறைந்து, 26,089 வாகனங்களாக குறைந்துள்ளது. இதே ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் ஏற்றுமதி 16,630 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 58.32% சரிவாகும். இதே வோல்க்ஸ் வேகன் இந்தியா ஏற்றுமதி 15,492 யூனிட்களாகவும் சரிவினைக் கண்டுள்ளன.

ஆனால் இதே காலகட்டத்தில் கியா மோட்டார்ஸ் நிறுவனம், 16,603 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 3,425.69% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+