டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையின் காரணமாக கடந்த ஆண்டு முழுக்கவே ஆட்டோமொபைல் துறைக்கு மிக மோசமான ஆண்டாகவே இருந்து வந்தது.
இதற்கு சிறந்த உதாரணம் தான், ஆட்டோமொபைல் துறையில் பணி இழப்பு, வேலையில்லா நாட்கள், உற்பத்தி குறைப்பு என பல செயல்பாடுகள் இதனை எதிரொலிக்கின்றன.

எனினும் இந்த மந்த நிலையில் சிறப்பாக செயல்பட்டு, ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதியை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து இந்தியா ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பயணிகள் வாகன விற்பனையானது 5.89% அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் குறிப்பாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 9 மாதங்களில் ஹூண்டாய் நிறுவனம் மட்டும் 1.45 லட்சம் யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் - டிசம்பர் வரையிலான காலத்தில் பயணிகள் வாகன விற்பனையானது 5,40,384 வாகனங்களாக ஏற்றுமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் 5,10,305 வாகனங்கள் ஏற்றுமதி செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக கார் ஏற்றுமதி மட்டும் 4.44% அதிகரித்து, 4,04,552 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதே பயன்பாட்டு வாகனங்கள் ஏற்றுமதியானது 11.14% அதிகரித்து 1,33,511 வாகனங்கள் ஏற்றுமதி செய்துள்ளதாகவும் சியாம் தெரிவித்துள்ளது.
இதில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா முதலிடத்திலும், ஃபோர்டு இந்தியா, மாருதி சுசூகி இந்தியா அடுத்தடுத்த இடத்திலும் உள்ளதாக சியாம் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ் எஸ் கிம் கூறுமையில் 2020ம் ஆண்டில் இந்த நிறுவனம் தொடர்ந்து நேர்மறையான வேகத்தைத் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகள் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள தருணங்களை சேர்ப்பதாகவும் கூறியுள்ளார்.
ஃபோர்டு இந்தியா இந்த ஒன்பது மாதங்களில் 1,06,084 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டைவிட 12.57% குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா 75,948 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதே நிசான் மோட்டார் கடந்த ஆண்டை விட 39.97% அதிகரித்து, 60,739 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதே வோல்க்ஸ்வேகன்47,021 வாகனங்களையும், இதே கியா மோட்டார்ஸ் 12,496 வாகனங்களையும், ரெனால்டு 12,096 வாகனங்களையும் ஏற்றுமதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications