இந்திய FMCG மற்றும் ஆயுர்வேத பொருட்கள் விற்பனையில் சூறாவளி போல் வளர்ந்து வந்த பதஞ்சலி நிறுவனம் ஆரம்பம் முதல் பொருட்களின் தரம் முதல் அந்நிறுவனம் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை பெற்று வந்தது. இதற்கிடையில் பதஞ்சலி நிறுவன பங்கு மதிப்பும் செபியின் உத்தருக்கு பின்பு சரிய துவங்கியது.
பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் பல நோய்களுக்கான மருந்து தயாரிப்புகளின் விளம்பரங்களில் தவறான மற்றும் பொய்யான கூற்றுக்களை வெளியிடுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.

இந்த நிலையில் பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி ஆயுர்வேத் புதன்கிழமை தனது தயாரிப்புகள் குறித்து தவறான விளம்பரங்களையோ அல்லது பிரச்சாரங்களையோ செய்யவில்லை என்றும், உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்தாலோ அல்லது எங்களுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் மறுக்க மாட்டோம் என்றும் கூறினார்.
எங்கள் மருந்துகளை பயன்படுத்தியோர் குறித்து எங்களிடம் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின் தரவுகள், ஆதாரங்கள், முன்கூட்டிய மற்றும் மருத்துவ சான்றுகள் உள்ளது எனவும் பாபா ராம்தேவ் கூறினார்.
பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆயிரக்கணக்கான மக்களின் பிபி, சுகர், தைராய்டு, ஆஸ்துமா, மூட்டுவலி, உடல் பருமன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்களிலிருந்து விடுவித்துள்ளது என்று இந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டு உள்ளது.
செவ்வாயன்று, நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) மனுவை விசாரிக்கும் போது, பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் இதுப்போன்ற தவறான மற்றும் பொய்யான விளம்பரங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற விதி மீறல்களை நீதிமன்றம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என எச்சரித்தது.
தடுப்பூசி இயக்கம் மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்ததாக IMA மனு கொடுத்த நிலையில், இதன் மீது உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 23, 2022 அன்று, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பதஞ்சலி நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications