இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆயுர்வேத பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் பங்குகளை இந்திய பங்குச்சந்தை மொத்தமாக முடக்கியுள்ளது. இந்த அறிவிப்பால் இன்றைய வர்த்தகத்தில் பதஞ்சலி பங்குகள் சுமார் 5 சதவீதம் சரிவடைந்துள்ளது.
திடிரென பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் பங்குகளை முடக்க என்ன காரணம்..? இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி விதிமுறைகள் படி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் அனைத்து நிறுவனங்களும் குறைந்தது 25 சதவீத பங்குகளை பொது சந்தையில் வைக்க வேண்டும் என்பது தான்.
ஆனால் பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் ப்ரோமோட்டர்களிடம் இந்நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதில் விதிமீறல் என்பதால் செபி பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள் பங்குகளை முடக்கியுள்ளது.
பதஞ்சலி புட்ஸ் நிறுவனம்
பதஞ்சலி புட்ஸ் நிறுவன பங்குச்சந்தை பட்டியலிட்ட காலத்தில் தாறுமாறாக உயர்ந்து பலரையும் வியக்க வைத்தது. ஆனால் ப்ரோமோட்டர்களின் பங்கு இருப்பு காரணமாகவும், அதன் தயாரிப்புகள் மீது மக்களுக்கு எழும் சந்தேகத்தாலும் சரிய துவங்கியது. கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு மருந்து வெளியிட்டு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
ப்ரோமோட்டர் பங்கு இருப்பு
பதஞ்சலி புட்ஸ் நிறுவன புதன்கிழமை ப்ரோமோட்டர் பங்கு இருப்பு குறித்து பாம்பே பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் இருந்து கடிதம் வந்ததை தெரிவித்தது. இந்த முடிவு மூலம் பதஞ்சலி புட்ஸ்-ன் 292.6 மில்லியன் பங்குகள் பாதிக்கும் என பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செபி விதிமுறை
பதஞ்சலி புட்ஸ் நிறுவன ப்ரோமோட்டர் பங்கு இருப்பை சரி செய்யும் காலம் ஜனவரி 2023 உடன் முடிவடைந்துள்ளது. இந்நிறுவனம் பட்டியலிடப்பட்ட உடன் முதல் 3 வருடத்திற்குள் செபி விதிமுறைகள் படி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் அனைத்து நிறுவனங்களும் குறைந்தது 25 சதவீத பங்குகளை பொது சந்தையில் வைக்க வேண்டும்.
பங்குச்சந்தை நோட்டீஸ்
இந்த நிலையில் பாம்பே பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை எடுத்துள்ள நடவடிக்கை மூலம் எங்களுடைய நிதி நிலையில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளது. இது எங்களை பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.
பொது சந்தை விதிமுறை
மேலும் அடுத்த சில மாதத்தில் பதஞ்சலி புட்ஸ் நிறுவன ப்ரோமோட்டர் பங்கு இருப்பை சரி செய்து, 25 சதவீத பங்குகளை பொது சந்தையில் இருப்பதை உறுதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. செபி நிதிமுறைகள் படி பாம்பே பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ப்ரோமோட்டர்கள் பங்குகளை ஏப்ரல் 2023 வரையில் முடக்கி வைத்திருக்கும்.
பதஞ்சலி புட்ஸ் நிறுவன பங்குகள்
மும்பை பங்குச்சந்தையில் பதஞ்சலி புட்ஸ் நிறுவன பங்குகள் இன்று அதிகப்படியாக 5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் 922.00 ரூபாய்க்கு துவங்கி 912.90 ரூபாய்க்கு சரிந்தது, வர்த்தக முடிவில் 2.59 சதவீதம் சரிந்து 936.00 ரூபாய்க்கு சரிந்துள்ளது.
ரூசி சோயா இண்டஸ்ட்ரீஸ்
2019ல் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் ரூசி சோயா இண்டஸ்ட்ரீஸ் என்ற முன்னணி சமையல் எண்ணெய் பிராண்டை வாங்கி புதிதாக எண்ணெய் துறையில் இறங்கியது. 2022 ஆம் ஆண்டில் Patanjali Foods என பெயர் மாற்றப்பட்டது, பதஞ்சலிக்கு செபி கடந்த 3 வருடத்தில் எச்சரிக்கையும், உத்தரவுகளையும் விடுத்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications