ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்களுக்கு பெயர்பெற்ற பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மீது உத்தரகண்ட் மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. நுகர்வோரை ஏமாற்றும் வகையில் மருந்துகளின் மருத்துவ குணங்களைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியதற்காக 14 மருந்துகளின் உற்பத்தி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதாவின் 14 பொருட்களின் விற்பனையை நிறுத்திவிட்டதாகவும், இந்த 14 தயாரிப்புகளையும் தனது 5,606 பிரான்சைஸ் ரீடைல் கடைகளில் இருந்து திரும்பப் பெற அறிவித்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளது.

அதன் அடிப்படையில், 14 தயாரிப்புகளுக்கான விளம்பரங்களை உடனடியாக அனைத்து ஊடகங்களிலும் நீக்க கூறிருப்பதாக பதஞ்சலி நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநில உரிம ஆணையம் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா லிமிடெட் மற்றும் திவ்யா பார்மசியின் 14 தயாரிப்புகளின் உற்பத்தி உரிமங்களை ரத்து செய்தது.
பின்வரும் 14 தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன: ஸ்வசாரி கோல்ட் (Swasari Gold), ஸ்வசாரி வதி (Swasari Vati), ப்ரோஞ்சோம் (Bronchom), ஸ்வசாரி பிரவாஹி (Swasari Pravahi), ஸ்வசாரி அவலே (Swasari Avaleh), முக்தா வதி எக்ஸ்ட்ரா பவர் (Mukta Vati Extra Power), லிபிடோம் (Lipidom), பிபி கிரிட் (Bp Grit), மதுக்ரிட் (Madhugrit), மதுனாஷினி வாட்டி எக்ஸ்ட்ரா பவர் (Madhunashini Vati Extra Power), லிவாமிரிட் அட்வான்ஸ் (Livamrit Advance), லிவோக்ரிட் (Livogrit), ஐயங்ரிட் கோல்ட் (Eyegrit Gold), த்ரிஷ்டி கண் சொட்டு மருந்து (Drishti Eye Drop). இந்த மருந்துகள் இனி உற்பத்தி செய்யப்படவோ, விற்பனை செய்யப்படவோ முடியாது.
மேலும், நாம் நோய்வாய்ப்படும் போது, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை வாங்குவதே சிறந்தது. எந்தவொரு மருந்தையும் வாங்கும் முன்பு, மருத்துவ துறையால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நம்பகமான நிறுவனங்கள் கூட தவறு செய்யலாம் என்பதை மனதில் கொண்டு, எச்சரிக்கையுடன் இருப்போம்.


Click it and Unblock the Notifications