இந்திய எப்எம்ஜிசி பிரிவில் அறிமுகமான சில வருடத்திலேயே நாடு முழுவதும் வர்த்தகம் விரிவாக்கம் செய்யப்பட்டு, குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருக்கும் பதஞ்சலி மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
அடுத்தடுத்து புதிய பொருட்களை அறிமுகம் செய்யப் பல்வேறு நிர்வாக மாற்றங்களைக் கையில் எடுத்திருக்கும் பதஞ்சலி தனது பிராண்ட் மதிப்பை அதிகரிக்கவும், புதிதாக வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
பதஞ்சலி நிறுவனம்
இதுநாள் வரையில் பதஞ்சலி நிறுவனத்தின் அனைத்து பொருட்களையும் பிரபலப்படுத்தும் விதமாகப் பாபா ராம்தேவ் புகைப்படத்தை மட்டுமே கொண்டு விளம்பரம் செய்து வந்த நிலையில், தற்போது பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்களை வைத்துப் பிராண்ட் என்டார்ஸ் செய்ய முடிவு செய்துள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ்
யோகா குரு பாபா ராம்தேவ் உருவாக்கிய பதஞ்சலி நிறுவனம், சமீபத்தில் இந்நிறுவனம் கைப்பற்றி ருச்சி சோயா நிறுவனத்தைப் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்களை வைத்து விளம்பரம் வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது நிர்வாகம்.
பாலிவுட், கிரிக்கெட்
இதுகுறித்து பாபா ராம்தேவ் கூறுகையில், தற்போதைய நிலையில் பிராண்ட் என்டார்ஸ்மென்ட் செய்வதற்காக ஒரு கிரிக்கெட் வீரர் மற்றும் ஒரு பாலிவுட் பிரபலம் உடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாக, அடுத்த சில நாட்களில் இதற்கான ஒப்பந்தம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ருச்சி சோயா நிறுவனம்
பாபா ராம்தேவ் ருச்சி சோயா நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார், அடுத்த 5 வருடத்தில் சுமார் 50000 கோடி ரூபாய் வர்த்தகத்துடன் எப்எம்ஜிசி துறையில் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் என நம்பிக்கையாகக் கூறியுள்ளார்.
புதிய பொருட்கள் அறிமுகம்
அடுத்த சில மாதங்களில் ப்ரோடின் சப்ளிமெண்ட் பவுடர் ஆன collagen prash, வெர்ஜின் பாமாயில் ஆகியவற்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் பனை மரங்களை இந்தியாவிலேயே வளர்க்கத் திட்டம் வகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தரம் கேள்வி
ஆனால் ஒவ்வொரு முறையும் பதஞ்சலி பொருட்கள் மீதான தரம் குறித்துக் கேள்வி எழுகிறது. இந்தக் கொரோனா காலத்தில் கூடக் கொரோனா தொற்றை விரட்டும் மருத்துக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்த அதை மத்திய அரசு தடை செய்தது. இப்படிப் பல தருணங்களில் இந்நிறுவன பொருட்கள் மீதான நம்பிக்கை கேள்வியாக உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications