50 பைசாவில் துவங்கி தினமும் 2 லட்சம் வருமானம்.. அசத்தும் நாகர்கோவில் பாட்ரிசியா நாராயண்..!

தனியொரு ஆளாக முயன்று ஊறுகாய் பிசினஸில் ஆரம்பித்து பெரிய உணவகத்தை உருவாக்கி கோடிகளில் லாபம் பார்க்கும், பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் பாட்ரிசியா நாராயண் வெற்றிக் கதை, இன்றும் பல இளம் தலைமுறையினருக்கு ஊந்துசக்தியாக உள்ளது.

பாட்ரிசியா நாராயண் நீங்கள் இவரை பற்றி அதிகம் கேள்விப்பட வாய்ப்பு குறைவு, ஆனால் இவர் நடத்தும் ஹோட்டல் மிகவும் பிரபலம். ஏன் நீங்கள் அந்த ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

யார் இந்த பாட்ரிசியா நாராயண்!

யார் இந்த பாட்ரிசியா நாராயண்!

நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் பாட்ரிசியா தாமஸ். இவரது பெற்றோர் இருவருமே அரசு வேலை பார்ப்பவர்கள். இவரது இளமைக் காலம் மிகவும் மகிழ்ச்சியானதாகவே இருந்தது.

கல்லூரி டூ காதல் திருமணம்!

கல்லூரி டூ காதல் திருமணம்!

அதன்பின் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை குயின்ஸ் மேரி கல்லூரியில் படிக்கும் பொழுது நாராயணன் என்பவரை சந்தித்துள்ளார். அவர் ஒரு இந்து பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அச்சமயம் நாராயணன் மீது காதல் வயப்பட்டு பெற்றோர்களை எதிர்த்து அவரை 17 ஆவது வயதில் திருமணம் செய்துள்ளார்.

கசப்பான குடும்ப வாழ்க்கை!

கசப்பான குடும்ப வாழ்க்கை!

ஆரம்ப காலத்தில் சந்தோசமாக ஆரம்பித்த அவரின் திருமண வாழ்க்கை, சிறுது காலத்திலேயே மோசமாக மாறியது. அவரின் கணவர் போதைப் பழக்கத்திற்கு அடியானவர் என்ற அறிந்தவுடன் பாட்ரிசியா அவரின் கனவுகள் அவர் கண்முன்னே சுக்குநூறாக உடைந்தது. அதன்பின் குடும்பத்தை வழிநடத்த போதிய வருமானமும் இல்லாலம், வயிற்றிலும், கையிலும் குழந்தையுடன் வேறு வழி தெரியாமல் தன் கணவரை பிரிந்து, பெற்றோர் வீட்டுக் சென்றுள்ளார். அவரின் பெற்றோரும் அவரை ஏற்றுக் கொண்டனர்.

ஊறுகாய் பிசினஸ்!

ஊறுகாய் பிசினஸ்!

பாட்ரிசியாவிற்கு உணவுகளை சுவையாக சமைப்பதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். அவரிடம் அப்பொழுது வேலைக்குச் செல்ல போதுமான கல்வித் தகுதி இல்லை என வேதனைப்பட்டுள்ளார். அதனையடுத்து வீட்டிலிருந்தே அதுவும் அவருக்கு விருப்பமான சமையல் மூலம் வியாபாரம் செய்ய ஆசைப்பட்டார்.

 ஊறுகாய் மற்றும் ஜாம்

ஊறுகாய் மற்றும் ஜாம்

அதன்பின் வீட்டிலிருந்தே வித விதமான ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரித்து விற்பனை செய்து அதனை விற்பனைக் கொண்டு சென்றுள்ளார். அவை அனைத்தும் ஒரே நாளில் விற்பனையாகி உள்ளது. அது பாட்ரிசியாவிற்கு ஒரு பெரும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது.

தள்ளுவண்டியில் வியாபாரம்!

தள்ளுவண்டியில் வியாபாரம்!

எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டிலேயே வியாபாரம் செய்வது என்று நினைத்து 1982ஆம் ஆண்டு மெரினாவில் சிறிதாக ஒரு தள்ளுவண்டிக் கடையை ஆரம்பித்தார். அதில் டீ, காபி, பஜ்ஜி, போண்டா, சமோசா போன்றவற்றை விற்பனை செய்யத் தொடங்கினார்.

50 பைசா

50 பைசா

முதல் நாளே அவருக்கு சரியாக வியாபாரம் ஆகவில்லை. அன்று அவருக்கு வெறும் 50 பைசா மட்டுமே கிடைத்தது. மனம் தளராத பாட்ரிசியா தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டார். அவரது கைவண்ணம் சென்னை வாசிகளை ஈர்த்தது. வியாபாரமும் சூடுபிடிக்க ஆரம்பித்து, ஆயிரங்களில் வருமானம் கிடைத்தது.

அடுத்தகட்ட வளர்ச்சி!

அடுத்தகட்ட வளர்ச்சி!

பாட்ரிசியாவின் தள்ளு வண்டிக்கடையில் வியாபாரம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரம், அவரின் கடை வழியாகச் சென்ற குடிசை மாற்று வாரியத்தின் தலைவர் கண்ணில் பட்டது. அங்கு சென்று சாப்பிட்டவுடன் பாட்ரிசியாவின் சமையல் அவருக்கு பிடித்துப் போகவே அவரின் அலுவலகத்தில் கேண்டீன் தொழிலை பாட்ரிசியாவிற்கு கொடுத்துள்ளார்.

கேன்டீன்

கேன்டீன்

அதனையடுத்து அவர் பல நிறுவனங்களுக்குச் சென்று அங்கும் அவரின் கேன்டீன் தொழிலை ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு வெற்றி முகம்தான். தொழிலும், அவரின் கௌரவமும் வளரத் தொடங்கியது.

மகளின் இழப்பு!

மகளின் இழப்பு!

தொழில் நன்றாக சென்று கொண்டிருந்த நேரம் பாட்ரிசியாவின் மகள் மற்றும் அவரின் கணவரும் சென்ற கார் விபத்துக்குள்ளாகி பாட்ரிசியாவின் மகள் சந்தீபாவும் அவரது கணவரும் உயிரிழந்தனர். அதன்பின் தன் மகனிடம் பொறுப்புகளை எல்லாம் ஒப்படைத்துவிட்டு பாட்ரிசியா சிறிது காலம் ஓய்வெடுத்து மீண்டும் தொழிலைப் பார்க்க தொடங்கினார்.

மகளின் நினைவாக ஆம்புலன்ஸ் சேவை!

மகளின் நினைவாக ஆம்புலன்ஸ் சேவை!

அச்சரப்பாக்கம் பகுதியில் தனது மகள் விபத்துக்கு உள்ளானபோது ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததால் தான் மரணமடைந்தார் என்பதால் அந்தப் பகுதியில் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கினார் பாட்ரிசியா. தனது மகளின் நினைவாக சந்தீபா ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றையும் தொடங்கினார்.

லட்சங்களில் வருமானம்!

லட்சங்களில் வருமானம்!

50 பைசாவில் தொடங்கிய இவரது உணவுத் தொழிலில் இப்போது ஒரு நாளைக்கு 2 லட்சத்துக்கு மேல் வருமானம் வருகிறது. இப்போது இவரது நிறுவனத்தின் கீழ் 200க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தொழில்முனைவோர் விருது!

தொழில்முனைவோர் விருது!

இவரது விடா முயற்சியால் ஏற்பட்ட வளர்ச்சியைப் பாராட்டி 2010ஆம் ஆண்டில் சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருதை இந்திய வர்த்தக தொழில் துறை கூட்டமைப்பு (FICCI) வழங்கியது.

வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அனைத்தையும் எதிர்த்து போராடி, கிடைத்த வாய்ப்பை வைத்து எப்படி பெண்கள் வெற்றி பெறலாம் என்பதற்கு பாட்ரிசியாவின் வெற்றிக் கதை ஒரு சிறந்த உதாரணமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+