வீட்டுக்கடன் மூலம் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி அதற்கு மாதத் தவணை செலுத்துவதா அல்லது வாடகை வீட்டில் இருந்து மாதாமாதம் வாடகை செலுத்துவதா என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கிறதா..? இந்த குழப்பம் இளம் தலைமுறையினருக்கு இருக்கும் முக்கியமான கேள்வி.
வீட்டுக் கடன்கள் மூலம் சொந்தமாக வீடு வாங்குவது நீண்ட கால பலனைத் தரும். வீட்டின் மதிப்பு உயர்வதால் அது பின்னர் நல்ல விலைக்குப் போகும்.
அது மட்டுமல்லாமல் சொத்து மதிப்பு உயர்தல், நிம்மதி, வரி சலுகைகள், உருப்படியான முதலீடு என பல நன்மைகள் சொந்த வீட்டின் மூலமாக கிடைக்கும்.

ஆனால் இந்த விஷயங்கள் எல்லாருக்கும் பொருந்தாது. சொந்த காரணங்கள், செய்யும் வேலை, உள்பட பல்வேறு காரணங்களால் தொடந்து வீடு அல்லது நகரங்கள் மாறுபவர்களுக்கு சொந்த வீடு வாங்குவதற்கு பதிலாக வாடகை வீட்டைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்.
Manipal Technologies Limited நிறுவனத்தின் தொழில்நுட்பத் தலைவர் அமர்ஜீத் ராம்பெர் கூறுகையில், வீட்டைப் பொறுத்தவரை இந்த இரண்டு தேர்வுகளுமே குழப்பத்தை ஏற்படுத்தலாம். நிதி நிலைமை, வீடு இருக்கும் பகுதி போன்ற காரணங்கள் சில முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தலாம் என்றார்.
சொந்தமாக வீடு வாங்கினால் அதன் மூலம் நீங்கள் நீண்ட கால பலன்களை அனுபவிக்கலாம். வீட்டுக் கடன் வாங்குவதன் மூலம் உங்களது சேமிப்பு அதிகரிக்கும், வரிச் சலுகைகள் கிடைக்கும். நீங்கள் சம்பாதிப்பதில் வருமான வரிச் சலுகை அசலுக்கும் வட்டிக்கும் சேர்த்தே கிடைக்கும் என்றார்.
சிலரது தொழில் அடிக்கடி இடமாறுதலுக்கு உட்பட்டிருக்கும். சொந்த காரணங்களுக்காக அடிக்கடி வேறு ஊர்களுக்குக் குடிபெயர வேண்டியிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு வாடகை வீடுதான் நல்ல தேர்வாக இருக்கும்.
சொந்த வீடு என்றால் நிலையான வீட்டுச் செலவுகள், சிறந்த முதலீட்டுத் திறன், மன நிறைவு, நிதி வளர்ச்சி, ஸ்திரத்தன்மை போன்ற உறுதியான அடித்தளம் இருக்கும்.
எப்படிப் பார்த்தாலும் இரண்டு தேர்வுகளும் அதற்கே உரிய சிறப்புகளை கொண்டுள்ளன. வீட்டுக்கடன் மூலம் வாங்கும் சொந்த வீட்டினால் வாடகை சுமை இருக்காது.
சொந்த வீட்டின் நன்மைகள்:
சொந்தமாக வீடு இருந்தால் அதன் மதிப்பு காலப்போக்கில் உயரும்.
சொந்த வீட்டின் மூலம் நிதிநிலைமை ஸ்திரமாக இருக்கும். வாடகை உயர்வு, திடீரென வீட்டை காலி செய்ய வேண்டிய நிர்பந்தங்கள் இருக்காது.
வீட்டுக்கடனை திரும்பச் செலுத்தும்போது கடனுக்கான அசலுக்கும் வட்டிக்கும் அரசு வருமான வரிச் சலுகையைத் தருகிறது.
ஆண்டுக்காண்டு ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே சொந்த வீடு வாங்கினால் நிச்சயம் அதன் விலை அதிகரிக்கும்.
வாடகை வீட்டின் நன்மைகள்:
அடிக்கடி வீடு மாறுபவர்களுக்கு வாடகை வீடு குறுகிய கால பலனைத் தரும்.
குறைவான வருவாய் உள்ளவர்களுக்கு சொந்த வீடு கட்டுவது கட்டுப்படியாகாது. எனவே வாடகை வீட்டிலிருந்தால் குடும்பச் செலவுகளை எளிதாகச் சமாளித்து விடலாம்.


Click it and Unblock the Notifications