ஜூலை 31-ஆம் தேதி காலக்கெடு முடிவடைய இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வரி செலுத்துவோர் மற்றும் சார்ட்டட் அக்கவுண்டண்ட்கள் வருமான வரி போர்ட்டலில் ஏற்பட்ட குளறுபடிகளுடன் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவது போல் எந்தவித அறிவிப்பும் வருமான வரித்துறையினரிடம் இருந்து வரவில்லை.
வரி தாக்கல் செய்யும் கடைசி நாளான இன்று ஏற்பட்ட இத்தகைய பிரச்சனைகளால் பலர் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

காலக்கெடுவைத் தவறவிட்டால், தாமதமாக ITR தாக்கல் செய்வதற்கு அதிக கட்டணம், வட்டி மற்றும் அபராதம் உள்ளிட்ட கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். வரி செலுத்துவோர் பழைய வரி முறையின் கீழ் விலக்குகளைப் பெறுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும். இந்த சவால்களுக்கு மத்தியில், காலக்கெடு நீடிக்கப்படுவது தொடர்பான கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. ஆனால் தற்போது வரை, இது தொடர்பாக எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
சுரேஷ் சுரானா, என்ற சார்ட்டட் அக்கவுண்டண்ட் கூற்றுப்படி, தாமதமாக ITR தாக்கல் செய்யும் வரி செலுத்துவோர் பிரிவு 139(1)-இன் கீழ் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகு வருமானத்தை சமர்ப்பித்தால், பிரிவு 234F-இன் கீழ் ரூ. 5,000 தாமதக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஆனால், ஒரு ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், தாமதக் கட்டணம் ரூ.1,000 ஆக குறைக்கப்படும். காலக்கெடுவிற்கு அப்பால், டிசம்பர் 31, 2024 வரை, தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டு முடிவதற்கு மூன்று மாதங்கள் வரை தாமதமாக ITR-ஐ தாக்கல் செய்யலாம். இருப்பினும் அபராதம் மற்றும் சில நன்மைகளை இழக்க நேரிடலாம்.
அபராதங்கள் இருந்தபோதிலும், சில வரி செலுத்துவோர் இந்தக் கட்டணங்களில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். அதன் படி வரம்பிற்குக் குறைவான வருமானம் உள்ளவர்கள் மற்றும் சட்டப்பூர்வமாக ஐடிஆர் தாக்கல் செய்யத் தேவையில்லாதவர்கள், போன்ற நபர்களுக்கு எந்த வித கட்டணமும் இல்லை. ஆனால் தானாக முன்வந்து ITR தாக்கல் செய்பவர்கள் தாமதமாகத் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படாது.
இன்னும் சில மணி நேரங்களில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிய இருப்பதால் பலரும் தங்களுடைய ITR-ஐ தாக்கல் செய்து வருகின்றனர். ஆனால் சில பிரச்சனைகள் இ-பைலிங் போர்ட்டலில் எழுந்துள்ளது.
இது குறித்து ஒரு சார்ட்டட் அக்கவுண்டண்ட் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு போஸ்டை பகிர்ந்து உள்ளார். அதில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டு, "நான் எனது கடந்த ஆண்டு ITR-ஐ டவுன்லோட் செய்ய 3 நாட்களாக முயற்சி செய்து வருகின்றேன். ஆனால் அதற்கு "Something went wrong" என்ற மெசேஜ் மட்டுமே வருகிறது. இன்போசிஸ் நிறுவனத்துக்கு இந்த போர்ட்டலுக்காக 4,200 கோடி செலுத்தியது முற்றிலும் தவறாகிவிட்டது" என்று தனது விரக்தியை பகிர்ந்து உள்ளார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications