Bitcoin.. பிட்காயினுக்கு பெருகும் அமோக ஆதரவுகள்.. இந்தியாவில் நிலை என்ன ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளுக்கு உலக முழுவதிலும் இருந்து ஆதரவுகள் பெருகி வருகின்றன. இதனால் பிட்காயின் மதிப்பானது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது பிட்காயின் மதிப்பு 57,151.70 டாலர்களாக உள்ளது.

உலகம் முழுவதிலும் பல நிறுவனங்கள் பிட்காயினை தங்களது பேமெண்ட்டுகளாக ஏற்றுக் கொண்டு வருகின்றன. குறிப்பாக உணவு நிறுவனங்கள், பிக் டெக் நிறுவனங்கள், முன்னணி drinks நிறுவனங்கள் என பலவும் கிரிப்டோகரன்சிகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளன.

ஒரு சாரர் கிரிப்டோகரன்சிகள் நம்பகமான முதலீடு இல்லை என்று கூறினாலும், மறுதரப்பில் சர்வதேச நிறுவனங்கள் இதற்கு ஆதரவை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் கிரிப்டோகரன்சியின் நிலை இன்று வரையிலும் கூட தலைகீழாகவே உள்ளது.

உச்சம் தொட்டு வரும் பிட்காயின்

உச்சம் தொட்டு வரும் பிட்காயின்

அதிலும் கடந்த ஆண்டில் உலக நாடுகளை கொரோனாவின் தாக்கம் வாட்டி வதைத்து வந்த நிலையில், பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தது. இதனுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவின் எஸ் &பி 500 குறியீடு கூட, குறைந்த அளவில் தான் ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கவில்லை

பாதிக்கவில்லை

கடந்த மாதத்தில் பிட்காயின் மதிப்பானது இதுவரை இல்லாத அளவான 60,000 டாலர்களை தொட்டது. பிட்காயினின் அதிக ஏற்ற இறக்கம் நன்கு அறியப்பட்டுள்ளது. வாரன் பஃபெட் உள்ளிட்ட முன்னணி முதலீட்டாளர்கள் அதனை ஆபத்தானது என்றும் விமர்ச்சித்து வருகின்றனர். எவ்வாறயினும் இத்தகைய எச்சரிக்கைகள் பெரியளவில் பிட்காயினை பாதிக்கவில்லை என்றே கூறலாம்.

பிட்காயின் மூலம் கட்டணம்
 

பிட்காயின் மூலம் கட்டணம்

ஏனெனில் பல நிறுவனங்களும் தற்போது பிட்காயினை தங்களது கட்டணமாக ஏற்றுக் கொள்கின்றன. ஆரம்பத்தில் டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க் தனது அனைத்து ரக கார்களுக்கும் பிட்காயினை ஏற்றுக் கொள்வதாக ஆரம்பத்தில் அறிவித்தார். இதன் பிறகு தான் தற்போது பல நிறுவனங்களும் பிட்காயினை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளன.

பர்கர் கிங்கின் ஆதரவு

பர்கர் கிங்கின் ஆதரவு

சர்வதேச உணவு சங்கிலி நிறுவனமான பர்கர் கிங், பிட்காயின் மற்றும் மற்ற கிரிப்டோகரன்சிகளையும் நாணயமாக ஏற்றுக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இதோடு கே எஃப் சி, பீட்சா ஹட், டகோ பெல் மற்றும் தி ஹாபிட் பர்கர் கிரில் உள்ளிட்ட உணவு சங்கிலி நிறுவனங்களும் கிரிப்டோகரன்சிகளை நாணயங்களாக ஏற்றுக் கொண்டுள்ளன.

டெக் நிறுவனங்கள் சில ஆதரவு

டெக் நிறுவனங்கள் சில ஆதரவு

இவைகள் தவிர மிகப்பெரிய டெக் நிறுவனங்களாக பேபால், Xbox, பான நிறுவனமான கோகா கோலா நிறுவனமும் கடந்த ஆண்டில் பிட்காயினை கட்டணமாக ஏற்றுக் கொண்டுள்ளது. இது தவிர ஸ்டார்பக்ஸ் நிறுவனமும் தனது ஆப் வழியாக பிட்காயினை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளது. இப்படியாக உலகம் முழுக்க கிரிப்டோகரன்சிகளுக்கான ஆதரவு பெருகி வருகின்றது.

இந்தியாவில் என்ன நிலை?

இந்தியாவில் என்ன நிலை?

ஆனால் இந்தியாவிலோ பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகள் இன்னும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிப்டோகரன்ஸிகள் சட்டத்துக்குப் புறம்பான்மையாகவே உள்ளன. மேலும் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வர போவதாகவும் கூறப்படுகிறது. எனினும் நம் நாட்டு ஏற்ற மாதிரியான ரூபாயின் மதிப்பில் கிரிப்டோகரன்சியை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paypal and starbucks are accepting bitcoin and other cryptocurrencies as payment

Cryptocurrencies updates.. Paypal and starbucks are accepting bitcoin and other cryptocurrencies as payment
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X