மும்பை: ரத்தன் டாடாவின் மறைவுக்கு பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஜய் சேகர் சர்மா இரங்கல் தெரிவித்து வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அவர் அதனை டெலிட் செய்து விட்டார்.
இந்தியாவில் பலரும் தொழில் தொடங்குவதற்கு முன் உதாரணமாக இருந்தவர் தான் ரத்தன் டாடா. அவரது மறைவு தொழில் உலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாடாவின் மறைவுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் சமூக வலைதளங்களில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால், பீப்பிள் குரூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனுபம் மிடல், ஸியோமி நிறுவனத்தின் முன்னால் தலைவர் மஞ்சு குமார் ஜெயின் உள்ளிட்ட பலரும் ரத்தன் டாடாவுக்கு புகழஞ்சலி தெரிவித்திருந்தனர்.
பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்த பதிவில் அனைத்து தலைமுறையினரையும் ஈர்க்கக்கூடிய ஒரு தலைவர் தான் ரத்தன் டாடா என கூறியுள்ளார் . அடுத்த தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு எல்லாம் ரத்தன் டாடாவின் இறப்பு பேரிழப்பாக இருக்கும் எனக் கூறியிருந்தார். இறுதியில் அவர் பதிவிட்டு இருந்த ஒரு வரி தான் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது . Ok Tata Bye Bye என அவர் பதிவு செய்திருந்தார். அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பலரது கண்டனத்திற்கும் ஆளானது.
இதனை எடுத்து அவர் அந்த பதிவினை டெலிட் செய்து விட்டார். இருந்தாலும் அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு பலரும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு பயனர் இரத்தன் டாடா அவர்களுக்கு நீங்கள் புகழஞ்சலி செலுத்தியது இருக்கட்டும் அதென்ன இறுதி வரியில் இப்படி ஒன்றை பதிவிட்டுள்ளீர்கள் எனக் கூறியுள்ளார்.
இது தவறானது என ஒரு பயனர் கூறியுள்ளார். செய்தியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறீர்களா என மற்றொரு நபரும் பின்னூட்டம் பதிவிட்டுள்ளார். ஒரு பயனர் அவர் வார்த்தை ஜாலங்களை பயன்படுத்துவதாக நினைத்து இப்படி செய்து விட்டார் என கூறியுள்ளார். எதிர்மறையான கருத்துக்கள் எழ தொடங்கியதை அடுத்து விஜய் சேகர் சர்மா தன்னுடைய பதிவையே நீக்கி விட்டாலும் ஸ்கிரீன்ஷாட் மூலம் அது அவரை இன்னும் பின் தொடர்கிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications