5ஜி சேவையை பயன்படுத்த முடியாத நிலைமை.. பேடிஎம் சி.இ.ஓ ட்விட்டால் பரபரப்பு!

இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை இன்டர்நெட் வசதியான 5ஜி சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது என்பதும் பிரதமர் மோடி இந்த சேவையை தொடங்கி வைத்தார் என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ தனது 5ஜி மொபைல் போனில் 5ஜி சேவை வரவில்லை என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேடிஎம் சி.இ.ஓ

பேடிஎம் சி.இ.ஓ

பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ விஜயசேகர் சர்மா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை பதிவு செய்தார். அதில் நான் 5ஜி சேவையை பெறுவதற்காக புதிய மொபைல் போனை வாங்கினேன் என்றும், ஆனால் டெல்லியில் 5ஜி சேவையை பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர் ஏர்டெல் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து பதிவு செய்த இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி சேவை

5ஜி சேவை

டெல்லி உள்பட பல முக்கிய நகரங்களில் 5ஜி சேவை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள பேடிஎம் சிஇஓ விஜய்சேகர் சர்மா, கூகுள் பிக்சல் 6ஏ என்ற 5ஜி சப்போர்ட் செய்யும் புதிய மொபைல் போனை வாங்கினார். ஆனால் அந்த மொபைல் போனில் 5ஜி சேவைக்கான ஆப்ஷனே இல்லை என காட்டுவதாக ஸ்க்ரீன்ஷாட் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை செய்துள்ளார்.

5ஜி மொபைல் போன்

5ஜி மொபைல் போன்

5ஜி சேவையை பயன்படுத்துவதற்காக மட்டுமே இந்த புதிய மொபைல் போனை வாங்கினேன் என்றும் ஆனால் அந்த சேவையை தன்னால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்றும் அவர் பகிர்ந்துள்ளார். பேடிஎம் சி.இ.ஓ பதிவு செய்த இந்த ஸ்கிரீன்ஷாட் தற்போது வைரலாகி வருகிறது

5ஜி பிரச்சனை

5ஜி பிரச்சனை

இதே போன்ற பிரச்சினை தங்களுக்கும் இருப்பதாக பல ட்விட்டர் பயனாளிகள் விஜய்சேகர் ஷர்மாவின் ட்விட்டுக்கு கமெண்ட் செய்துள்ளனர். ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்களின் ட்விட்டர் பக்கங்களை டேக் செய்து கமெண்ட்ஸ் பதிவு செய்யப்பட்டு வருகின்ற்ன.

ஏர்டெல் பதில்

ஏர்டெல் பதில்

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு ஏர்டெல் தனது இணையதளம் மூலம் பதில் அளித்துள்ளது. ஆப்பிள், சாம்சங், சியோம், விவோ, ஒப்போ, ரியல்மீ மற்றும் ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்களின் புதிய 5ஜி மாடல்களில் 5ஜி சேவை சப்போர்ட் செய்யும் என்றும் இன்னும் சில சாதனங்களில் 5ஜி சப்போர்ட் செய்யும் வகையில் மென்பொருள் புதுப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

ஜியோ-ஏர்டெல்

ஜியோ-ஏர்டெல்

இந்தியாவில் அக்டோபர் 6ஆம் தேதி 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட ஒரு சில நகரங்களில் தற்போது 5ஜி சேவை வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தங்களுடைய சிம்கார்டை மாற்றாமல் 5ஜி சேவையை பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 5 சேவைக்காக இப்போதைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க போவதில்லை என்றும் அறிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+