இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி-யின் தலைமைப் பொறுப்பில் இருந்த முரளி கிருஷ்ணன், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முரளி கிருஷ்ணன் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் டாக்டரல் பட்டம் பெறும் நோக்கத்திற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு சியோமி நிறுவனத்தில் இணைந்த முரளி கிருஷ்ணன், அதற்கு முன்பு ஜாபங் நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருந்தார். சியோமி நிறுவனத்தில், அவர் ஆப்ரேஷன்ஸ், சர்வீசஸ், பொது விவகாரங்கள் மற்றும் மூலோபாய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பணிகளைச் செய்துள்ளார்.

இதேவேளையில் முரளி கிருஷ்ணன் வெளியேற்றத்திற்காக சியோமி இந்தியா சமீபத்தில் விற்பனை (சேலஸ்) மற்றும் விநியோக (Distribution) பிரிவில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. சியோமி சமீபத்தில் சாம்சங்கின் முன்னாள் மூத்த நிர்வாகியான குணால் அகர்வாலை துணை விற்பனைத் தலைவராக நியமித்துள்ளது. இதன் மூலம் குணால் அகர்வால், சியோமியின் ஆஃப்லைன் சில்லறை விற்பனையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவார்.
முரளி கிருஷ்ணன், சியோமி இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினாலும், நிறுவனத்திற்கு ஒரு ஆலோசகராக தொடர்ந்து ஆதரவளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் ஷ்ரேயாஸ் சீனிவாசன்: பேடிஎம் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக (Chief Product Officer - CPO) இருந்த ஷ்ரேயாஸ் சீனிவாசன், நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம், பத்தாண்டுகளாக தொழில்நுட்ப மற்றும் லைவ் பொழுதுபோக்கு துறையில் பணியாற்றிய அவரது பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
ஷ்ரேயாஸ் சீனிவாசனின் வெளியேற்றம், பேடிஎம்-ன் டிக்கெட் விற்பனை தளமான இன்சைடர்.இன், சுமார் ரூ.2,048 கோடிக்கு சோமேட்டோ நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது வெளியேற்றுகிறார். தனது லிங்க்டுஇன் பக்கத்தில் தனது வெளியேற்றம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று தனது கடைசி பணி நாள் என்றும், ஆகஸ்ட் மாதம் இன்சைடர்.இன் நிறுவனத்தில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.
"சோமேட்டோ மற்றும் பேடிஎம் என்டர்டெயின்மெண்ட் இடையேயான ஒப்பந்தம் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த பின்னர், ஓய்வெடுக்கவும், உடல்நலத்தை மேம்படுத்திக் கொள்ளவும், அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தொடரும் ஒரு வர்த்தகத்தைக் கண்டறியவும் இதுவே சரியான நேரம் என்று கருதி வெளியேறுகிறேன்" என்று தனது பதிவில் ஸ்ரீநிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
டிக்கெட் விற்பனை பிரிவை விற்பனை செய்த பின்பு, பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு (FY 2025) லாப அளவுகள் ரூ.930 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. இது பேடிஎம் எதிர்கொண்டு வந்த தொடர்ந்து சரிவிற்கு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications