பேடிஎம் ஈகாமர்ஸ் நிறுவனம் அதன் பெயரை Pai பிளாட்ஃபார்ம்ஸ் என மாற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் ஒப்பன் சோர்ஸ் ஈகாமர்ஸ் தளமான ONDC-யில் இயங்கி வரும் ஒரு விற்பனையாளர் தளமான Bitsila-வை வாங்கியுள்ளது.
பேடிஎம் தனது ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் தனது பங்கீட்டை இந்த நிறுவன கைப்பற்றல் மூலம் அதிகரிக்க உள்ளது.

மேலும் பேடிஎம் ஈகாமர்ஸ் நிறுவனம் அதன் பெயரை Pai பிளாட்ஃபார்ம்ஸ் என மாற்ற மூன்று மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தது மற்றும் பிப்ரவரி 8 ஆம் தேதி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களின் பதிவாளரிடமிருந்து (RoC) ஒப்புதல் பெற்றது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதன் துணை நிறுவனமான பேமெண்ட்ஸ் வங்கியில் ஏற்பட்ட நெருக்கடிக்கு நிறுவன அளவிலும் முதலீட்டாளர்கள் அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் Paytm இ-காமர்ஸ் பிரிவு ஸ்டார்ட்அப் பிட்சிலா-வை வாங்க உள்ளது. இந்த ஒப்பந்தம் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் வரும் வாரத்தில் ஒப்பந்தம் முடிவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் தசரதம் பிட்லா மற்றும் சூரியா பொக்கலி ஆகியோரால் துவங்கப்பட்டது தான் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான பிட்சிலா. இது மத்திய அரசின் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க்கில் (ONDC) விற்பனையாளர் பிரிவு சேவைகளை வழங்கி வரும் ஒரு மூலம் பெங்களூர் நிறுவனமாகும்.
விஜய் சேகர் சர்மா தலைமையிலான பேடிஎம் ஈகாமர்ஸ் நிறுவனம் ஏற்கனவே ONDC இல் பையர் பிரிவு சேவையில் உள்ளது. இந்தக் கையகப்படுத்துதலின் மூலம், Paytm ஆனது ONDC க்குள் தனது வர்த்தகத்தை விரிவாக்க முடியும் என்று தெரிகிறது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி KYC விதிகளைப் பூர்த்திச் செய்யாத பல லட்சம் கணக்குகளில் இருந்து பேமெண்ட்களைப் பிராசஸ் செய்துள்ளது. இதோடு ஓரே பான் கார்டு வைத்து பல கணக்குகள் திறக்க பயன்படுத்தப்பட்ட 1000த்திற்கும் அதிகமான வழக்குகள் உள்ளதையும் ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது.
இதை தொடர்ந்து ஜனவரி 31 அன்று இந்திய ரிசர்வ் வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் செய்த விதிமுறைகளைத் தொடர்ந்து மிகப்பெரிய வணிகக் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தக் கட்டுப்பாடு படி பிப்ரவரி 29 க்குப் பிறகு புதிய வைப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் கடன் பரிவர்த்தனைகள் செய்வது ஆகியவை தடை செய்யப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து பேடிஎம்-க்கு முன்பே எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்கப் போதுமான நேரத்தை விட அதிகமாகக் கொடுத்துள்ளதாகவும். இதன் பின்பும் பேடிஎம் கடைப்பிடிக்காத காரணத்தால் Paytm-ல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சுவாமிநாதன் ஜானகிராமன் விளக்கம் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications