PM-CARES Fund என்கிற திட்டத்தை சமீபத்தில் தான் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.
இந்த திட்டத்துக்கு பல தொழிலதிபர்கள் தொடங்கி, பிரபலங்கள் வரை தங்களால் முடிந்த நன்கொடைகளைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதில் இந்தியாவின் மிகப் பெரிய பேமெண்ட் கம்பெனிகளில் ஒன்றான பேடிஎம் (Paytm) நிறுவனமும் பங்கு எடுத்து இருக்கிறது.
100 கோடி
பேடிஎம் (Paytm) ப்ளாட்பார்மில், பிரதமரின் நன்கொடை திட்டத்துக்கு சுமாராக 100 கோடிக்கு மேல் நிதி திரண்டு கொண்டு இருப்பதாக, சமீபத்தில் சொல்லி இருக்கிறது. பேடிஎம் (Paytm) நிறுவனம், பிதமரின் நன்கொடை திட்டத்துக்கு சுமார் 500 கோடி ரூபாயை கொடுக்க இருப்பதாக அறிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
10 ரூபாய்
பேடிஎம் (Paytm) வழியாக (பேடிஎம் வேலட், டெபிட் கார்ட், யூ பி ஐ பணப் பரிவர்த்தனை) பிரதமரின் நன்கொடை திட்டத்துக்கு பணம் செலுத்தினால் 10 ரூபாய் வரை பேடிஎம் (Paytm) நிறுவனம் கூடுதலாகச் செலுத்தும் எனச் சொல்லி இருந்தது. இவை எல்லாம் போக இன்னொரு நல்ல காரியத்தை பேடிஎம் ஊழியர்கள் செய்து இருக்கிறார்கள்.
ஊழியர்கள்
பேடிஎம் (Paytm) நிறுவனத்தில் சுமாராக 1,200 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்களாம். பிரதமரின் நன்கொடை திட்டத்துக்கு சுமாராக 15 நாட்கள் முதல் 3 மாதம் வரை தங்கள் சம்பளத்தை நன்கொடையாகக் கொடுத்து இருக்கிறார்களாம். இந்த நெருக்கடியான காலத்தில், அவர்கள் வேலை இருக்குமா? அடுத்த மாதம் அவர்களுக்கு சம்பளம் வருமா என்று கூட கவலைப்படாமல், பேடிஎம் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை கொடுக்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது.
பேடிஎம் தரப்பு
"இந்திய குடிமகன்கள் எல்லோருமே, இந்த கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒன்று சேர வேண்டும். தங்களால் முடிந்ததை நன்கொடையாக வழங்க வேண்டும். கொரோனாவுக்காக நாம் கொடுக்கும் ஒரு சிறிய நன்கொடை, நம்மை ஒரு வலுவான தேசமாக்க உதவும்" எனச் சொல்லி இருக்கிறார் பேடிஎம் நிறுவனத்தின் துணைத் தலைவர் அமித் வீர்.
பெரிய நன்கொடைகள்
இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் டாடா ட்ரஸ்ட், டாடா சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் 1,500 கோடி ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். விப்ரோ, விப்ரோ எண்டர்பிரைசஸ், அசிம் ப்ரேம்ஜி ஃபவுண்டேஷன் அமைப்பு எல்லாம் சேர்ந்து சுமார் 1,125 கோடி ரூபாய் வழங்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி கார்ப்பரேட்களும் தங்களால் முடிந்ததைச் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications