கிரிப்டோகரன்சியின் எதிர்காலம் இப்படி தான்.. பச்சை கொடி காட்டிய விஜய் சேகர் ஷர்மா..!

கிரிப்டோக்களின் எதிர்காலம் என்னவாகும்? இந்திய அரசு என்ன தான் முடிவு செய்யப்போகிறது? முதலீட்டினை தொடரலாமா? ஏற்கனவே செய்த முதலீட்டினை வெளியே எடுக்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

இப்படி பல கேள்விகளுக்கு மத்தியில் கிரிப்டோகரன்சி குறித்தான ஒழுங்குமுறை மசோதாவினை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு புறம் தனியார் கிரிப்டோகரன்சிகள் தடை செய்யப்படலாம் என்ற யூகங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் மறுபுறம் சிலர் ஆதாரவு தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் கிரிப்டோகரன்சி குறித்தான குழப்பமான மன நிலையே, இன்னும் பெரும்பாலானோர் மத்தியில் இருந்து வருகின்றது.

கிரிப்டோகரன்சி குறித்து பேடிஎம்

கிரிப்டோகரன்சி குறித்து பேடிஎம்

கிரிப்டோகரன்சி குறித்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் விஷய் சேகர் ஷர்மா, கிரிப்டோகரன்சி குறித்து நாம் மிகவும் பாசிட்டிவ் ஆக உள்ளேன். கிரிப்டோகிராபி என்பது வரும் ஆண்டுகளில், மக்கள் மத்தியில் இணைய சேவை எந்தளவுக்கு மக்களுக்கு தேவையாக உள்ளதோ? அந்தளவுக்கு அவசியமானதாக மாறலாம். அவசியமான ஒரு தொழில் நுட்பமாக இருக்கும் என கூறியுள்ளார்.

கிரிப்டோகிராபி விளக்கம்

கிரிப்டோகிராபி விளக்கம்

மேலும் கிரிப்டோகரன்சிகள் இங்கேயே இருக்கலாம். இது பாதுகாப்பான தகவல் தொழில் நுட்பங்களின் ஆய்வான கிரிப்டோகிராபி அடிப்படையிலானது என கூறியுள்ளார்.

அதென்ன கிரிப்டோகிராபி? சில கணித முறைகளை பயன்படுத்தி தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதான் கிரிப்டோகிராபி. இது மிக முக்கியமான தகவல்கள் பரிமாற்றம் செய்யும்போது, இடையில் உள்ளவர்களிடம் பாதுகாப்பது தான்.

பேடிஎம்மில் கிரிப்டோவா?

பேடிஎம்மில் கிரிப்டோவா?

சமீபத்தில் இந்திய அரசு கிரிப்டோகரன்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்தால், அதனை பேடிஎம் ஆப் மூலம் அனுமதிக்கலாம் என பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகரி மதுர் தியோரா கூறியிருந்தார்.

இப்படியொரு நிலையில் தான் தற்போது விஜய் சேகர் ஷர்மாவின் கருத்தும் வந்துள்ளது. அரசு கிரிப்டோகளுக்கு ஆதாரவாக இருந்தால் பேடிஎம் அதனை ஆதாரிக்கலாம் என்பதும் இதன் மூலம் தெளிவாக தெரிகின்றது. எனினும் இது யூகமே என்றாலும், இது குறித்த அதிகாரப்பூர்வமாக தகவல் வந்தால் மட்டுமே முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.

பேடிஎம் பங்கு விலை

பேடிஎம் பங்கு விலை

இதற்கிடையில் பேடிஎம் பங்கின் விலை இன்று என்.எஸ்.இ-ல் 3.43% குறைந்து, 1737.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே பி.எஸ்.இ-ல் 3.27% குறைந்து, 1737.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
சில வாரங்களுக்கு முன்பு தான் தனது பங்கு வெளியீட்டினை செய்த பேடிஎம், சந்தையில் பட்டியிலிடப்பட்ட முதல் நாளே பலத்த சரிவினைக் கண்டது. தற்போது மீண்டும் சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதன் இலக்கினை 1,200 ரூபாயாக ஆய்வாளார்கள் கணித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+