இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் சேவை நிறுவனமாகத் திகழும் பேடிஎம் நிறுவனம் கடந்த 3 வருடத்தில் கண்மூடித்தனமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் மிகையில்லை. இதற்கு முக்கியமாகக் காரணம் பணமதிப்பிழப்புச் செய்யப்பட்ட காலத்தைப் பேடிஎம் பெரிய அளவில் பயன்படுத்திக்கொண்டது. தற்போது பாஸ்ட்டேக் டிசம்பர் 1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில், பாஸ்ட்டேக்-கிற்காகப் பேமெண்ட் சேவையை விரிவாக்கம் செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் முதல் முறை ரீசார்ஜ் செய்வோருக்கு சில ஆஃபர்களையும் பேடிஎம் அளித்து வருகிறது.
இந்த முக்கியமான வளர்ச்சிக்கட்டத்தில் பேடிஎம் நிறுவனம் அமெரிக்க, சீன மற்றும் ஜப்பான் நிறுவனங்களிடம் இருந்து வர்த்தக வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளது.
புதிய முதலீடு
நாட்டின் முன்னணி பேமெண்ட் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் பேடிஎம் நிறுவனம் தனது வர்த்தக விரிவாக்கத்திற்காகப் பல முறை முதலீட்டை ஈர்த்துள்ளது. இதன் படி தற்போது அமெரிக்காவின் அசர்ட் மேனேஜர் டி ரோவ் பிரைஸ் மற்றும் சீனா அலிபாபாவின் Ant பைனான்சியல் மற்றும் ஜப்பான் நாட்டின் சாப்பேங்க் விஷன் பன்ட் ஆகிய நிறுவனங்களிடம் சுமார் 1 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை ஈர்த்துள்ளது.
மிகப்பெரிய தொகை
இந்தியாவும் இந்திய பொருளாதாரமும் இந்த வருடம் பல்வேறு காரணங்களுக்காகப் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பெரிய அளவிலான முதலீடுகள் குவியவில்லை. இது மிகவும் வேதனையாக இருந்த நிலையில் பேடிஎம்-இன் 1 பில்லியன் டாலர் முதலீட்டுத் தொகை தான் இந்த ஆண்டு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் வந்த அதிகப்படியான முதலீடு.
16 பில்லியன் டாலர் முதலீடு
இப்புதிய முதலீடுகள் பேடிஎம் நிறுவனத்தை 16 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் டி ரோவ் பிரைஸ் நிறுவனம் 400 மில்லியன் டாலரும், Ant பைனான்சியல் நிறுவனம் 400 மில்லியன் டாலரும், சாப்ட்பேங்க் 200 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாகப் பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார்.
மொத்த முதலீடு
இதுவரை பேடிஎம் நிறுவனம் கிட்டத்தட்ட 3.5 பில்லியன் டாலர் வரையிலான தொகையை வெளி சந்தையில் இருந்து முதலீட்டை ஈர்த்துள்ளது.
இந்த முதலீட்டின் சிறப்பு என்னவென்றால் அமெரிக்காவின் டி ரோவ் பிரைஸ் நிறுவனம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சுமார் 1 டிரில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் முதலீட்டில் வால்மார்ட் கைப்பற்றிய பிளிப்கார்ட் நிறுவனமும் ஒன்று.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications