பேடிஎம் நிறுவனம் முறைகேடாகப் பல லட்சம் கணக்குகளில் விதிமுறைகளை மீறி பணத்தை அனுப்பியுள்ளது மூலம் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பிரச்சனையைச் சரி செய்யப் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா ஆர்பிஐ அலுவலகம், நிதியமைச்சக அலுவலகத்தின் கதவுகளைத் தட்டி வருகிறார்.
இந்த முக்கியமான நேரத்தில் பிரச்சனைகளின் மொத்த உருவமான Paytm Payments Bank (PPBL) நிறுவனத்தின் இன்டிபென்டென்ட் டைரக்டரான மஞ்சு அகர்வால், PPBL மீதான இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, அதன் நிர்வாகக் குழுவில் இருந்து பிப்ரவரி 1, 2024 முதல் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மஞ்சு அகர்வால், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் ஆவார், இவர் மே 2021 முதல் பேடிஎம் பேமெண்ட் பேங்க்கின் நிர்வாகக் குழுவில் பணியாற்றி வருகிறார். பேடிஎம் நிர்வாகம் மோசமான நிலையில் இருக்கும் போது இத்தகைய அறிவிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று காலை வர்த்தகத்தில் பேடிஎம் பங்குகள் சுமார் 7.50 சதவீதம் வரையில் சரிந்தது.
ஜனவரி 31 அன்று இந்திய ரிசர்வ் வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் செய்த விதிமுறைகளைத் தொடர்ந்து மிகப்பெரிய வணிகக் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தக் கட்டுப்பாடு படி பிப்ரவரி 29 க்குப் பிறகு புதிய வைப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் கடன் பரிவர்த்தனைகள் செய்வது ஆகியவை தடை செய்யப்பட்டு உள்ளது.
ஆர்பிஐ வழக்கமாகச் செய்யும் கண்காணிப்பில், நிதியியல் தளங்கள் மற்றும் பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு மத்தியில் முறைகேடாக, சந்தேகத்திற்கு இடமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள விதிமுறைக்கு மீறிய நிதி பரிமாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதை ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது. KYC ப்ரீபெய்டு நிதி திட்டங்களுக்கு இருக்கும் லிமிட் அளவுக்கு அதிகமாகத் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி KYC விதிகளைப் பூர்த்திச் செய்யாத பல லட்சம் கணக்குகளில் இருந்து பேமெண்ட்களைப் பிராசஸ் செய்துள்ளது. இதோடு ஓரே பான் கார்டு வைத்து பல கணக்குகள் திறக்க பயன்படுத்தப்பட்ட1000த்திற்கும் அதிகமான வழக்குகள் உள்ளதையும் ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று RBI தனது இருமாத நாணய கொள்கை கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களை ஆர்பிஐ உயர் அதிகாரிகள் சந்தித்தனர். இக்கூட்டத்தில் பேடிஎம் மீதான ஆர்பிஐ நடவடிக்கை முக்கிய விவாத பொருளாக மாறியது, அப்போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சுவாமிநாதன் ஜானகிராமன் முக்கியமான சில விஷயங்களைத் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து பேடிஎம்-க்கு முன்பே எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்கப் போதுமான நேரத்தை விட அதிகமாகக் கொடுத்துள்ளதாகவும். இதன் பின்பும் பேடிஎம் கடைப்பிடிக்காத காரணத்தால் Paytm-ல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சுவாமிநாதன் ஜானகிராமன் விளக்கம் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications