டிஜிட்டல் கட்டண தளமான பேடிஎம், தனது வணிக கூட்டாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் ஒரு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. "பேடிஎம் ஹெல்த் சாத்தி" (Paytm Health Saathi) என்ற பெயரிலான இந்த புதிய திட்டம், சுகாதார மற்றும் வருமான பாதுகாப்பை, அதன் வணிக கூட்டாளிகளுக்கு வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மலிவு விலையில் விரிவான சுகாதார காப்பீட்டு பலன்களை வணிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாதத்திற்கு வெறும் ரூ. 35 என்ற குறைந்த கட்டணத்தில் தொடங்கும் இந்த திட்டம், பல்வேறு சேவைகளை வழங்குகிறது.

பேடிஎம் ஹெல்த் சாத்தி என்ற திட்டத்தின் மூலம், பேடிஎம் அதன் வணிகர்கள் மருத்துவ ஆலோசனை, மருத்துவ பரிசோதனை போன்றவற்றைப் பெற முடியும். இது மட்டுமல்லாமல், விபத்துக்கள், இயற்கை பேரிடர்கள் அல்லது வேலைநிறுத்தம் காரணமாக வியாபாரம் பாதிக்கப்படும் சூழ்நிலைகளில் வருமான பாதுகாப்பும் கூட வழங்கப்படுகிறது.
எங்கள் வணிக கூட்டாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பேடிஎம் ஹெல்த் சாத்தி திட்டம் வெளிப்படுத்துகிறது. விரிவான மற்றும் மலிவு விலையிலான காப்பீட்டை வழங்குவதன் மூலம், அவர்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதே எங்கள் நோக்கம் என்று பேடிஎம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இது பேடிஎம் ஃபார் பிசினஸ் (Paytm for Business) என்ற அப்ளிகேஷனில் கிடைக்கிறது.
பேடிஎம் ஹெல்த் சாத்தி திட்டம் வணிகர்களின் ஆரோக்கியத்தையும், வியாபாரத்தையும் மேம்படுத்தி, மருத்துவ செலவுகளைக் குறைப்பதற்கு உதவுகிறது. மெடிபடி (MediBuddy) நிறுவனம் வழங்கும் மருத்துவ ஆலோசனை சேவை மூலம் வீட்டிலிருந்தே மருத்துவரை கலந்தாலோசித்து, நேரத்தை மிச்சப்படுத்தலாம். மேலும், முன்னணி மருந்தகங்களிலும், பரிசோதனைகளிலும் தள்ளுபடிகளைப் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும் இத்திட்டத்தின் கிளைம் செயல்முறை நெறிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பேடிஎம் ஃபார் பிசினஸ் அப்ளிகேஷனில் ஒரு சில கிளிக்குகளில் முடிக்க முடியும். இதனால் எந்த கவலையும் இல்லாமல் தங்கள் வணிகர்கள் வணிகத்தில் கவனம் செலுத்த முடியும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
ஏற்கனவே 3,000 வணிகர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அதன் ஆரம்ப வெற்றியைத் தொடர்ந்து, நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் அதன் அனைத்து வணிகர்களுக்கும் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications