இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் நிதியியல் மற்றும் பேமெண்ட் சேவை நிறுவனமான பேடிஎம், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக 18,300 கோடி ரூபாய் என்ற வரலாற்று ஐபிஓ வெளியிட்டு உள்ளது.
இந்த ஐபிஓ-வில் ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் பெரும் நிறுவன முதலீட்டாளர்கள் வரையில் முதலீடு செய்து வரும் நிலையில் சில முன்னணி முதலீட்டு வல்லுனர்கள் பேடிஎம் ஐபிஓ மிகவும் ஆபத்தான ஐபிஓ-வாக இருக்க வாய்ப்பு உண்டு என அறிவித்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேடிஎம்
இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் தளமாக இருக்கும் பேடிஎம் வளர்ச்சி அடையவும், விரிவாக்கம் செய்யவும் இன்னும் பல வாய்ப்புகள் இருக்கும் வேளையில் முன்கூட்டியே capitalise செய்துள்ளது என ஆல்டர் கேப்பிடல் நிறுவனத்தின் முதலீட்டு மேலாளர் ராக்கி பிரசாத் ப்ளூம்பெர்க் டிவிக்குத் தெரிவித்துள்ளார்.
ஆபத்தான முதலீடு
மேலும் பேடிஎம் மீடியம் டூ லாங் டர்ம் பிரிவில் மிகவும் ஆபத்தான முதலீடாக உள்ளது (very high-risk bet) எனவும் குறிப்பிட்டு உள்ளார். இதேபோல் பேடிஎம் நிறுவனத்தின் குறுகிய காலகட்டத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் லாபத்தை அடைந்த பின்பு ஐபிஓ வெளியிட்டு இருந்தால் பார்வை முற்றிலும் மாறியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
பேடிஎம் ஐபிஓ
பேடிஎம் நிறுவனத்தின் 18,300 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ நவம்பர் 8ஆம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிய உள்ளது. ஒரு பங்கு விலை ₹2080 முதல் ₹2150 வரையிலான விலையில் ஐபிஓ முதலீட்டு திறக்கப்பட்டு உள்ளது.
ஐபிஓ முதலீடு
2வது நாள் முடிவில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 1.23 மடங்கு அதிக முதலீடுகள் குவிந்துள்ளது. ஆனால் QIB பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளை 0.46 மடங்கும், NII பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளை 0.05 மடங்கும் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
48 சதவீதம் மட்டுமே
முதன் மூலம் 18,300 கோடி ரூபாய் ஐபிஓ-வில் வெறும் 48 சதவீத தொகைக்கான முதலீடு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. நவம்பர் 10ஆம் தேதி மீதமுள்ள பங்குகள் விற்பனை செய்யப்பட்டால் குறிப்பிட விலையில் பேடிஎம் மும்பை பங்குச்சந்தையில் நவம்பர் 18ஆம் தேதி பட்டியலிடப்படும், இல்லையெனில் குறைவான விலைக்கே பட்டியலிடப்படும்.
சோமேட்டோ மேஜிக்
ஆனால் ஐபிஓ வெளியிடும் முன்பு பேடிஎம் நிறுவனத்திற்கு ஆங்கர் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தது மறுக்க முடியாது. இதேபோல் இந்தியாவில் பேமெண்ட் துறையில் அதிகப்படியான வளர்ச்சி வாய்ப்புகள் இருக்கும் இதே வேளையில் போட்டியும் அதிகமாக உள்ளது.
சோமேட்டோ போல் பேடிஎம் நிறுவனமும் மேஜிங் செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications