ஃபின்டெக் பெருநிறுவனமான பேடிஎம் ஆன்லைன் டாக்சி சேவை துறையில் இறங்கியுள்ளது. டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் ஆட்டோ ரிக்ஷா சேவைகளை பயணிகளுக்கு வழங்குகிறது. மத்திய அரசின் ஓபன் நெட்வொர்க் டிஜிட்டல் காமர்ஸ் என்ற தளத்தின் மூலம் இந்த சேவை இயக்கப்படுகிறது. இது ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு போட்டியாக விளங்கக்கூடும்.
பேடிஎம் ஆப்பில் உள்ள டாக்சி அம்சம் இப்போதும் சோதனை முறையில் தான் உள்ளது. குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அம்சத்தை பரிசோதனை செய்த பேடிஎம் உணவு டெலிவரி, பலசரக்கு, பேஷன், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விநியோகத்தையும் நேரலையாக ஓஎன்டிசி மூலம் செய்து பார்த்தது.

இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக பல்வேறு சாப்ட்வேர் பரிசோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஓலா, ஊபர் போன்று டாக்ஸி சவாரி சேவைகளையும் பேடிஎம்மால் எதிர்காலத்தில் செய்ய முடியும்.
பேடிஎம் ஆப்பில் ஒரு ஆட்டோ புக் செய்யப்பட்டால் அந்த வசதியை பவர்டு பை நம்ம யாத்ரி என்று அழைக்கப்படுகிறது. ஜஸ்ட்பே சார்ந்த இந்த பிளாட்பார்ம் பல்வேறு நுகர்வோர் சார்ந்த ஆப்களை ஓஎன்டிசி சவாரி சேவைக்கு பயன்படுத்துகிறது.
கடந்த சில ஆண்டுகளில் நம்ம யாத்ரி மூலம் பெங்களூரு, தில்லி, கொல்கத்தா உள்பட 7 நகரங்களில் 3.73 கோடி சவாரிகளை இயக்கியுள்ளது. இருப்பினும் இதில் பெரும்பாலனவை ஆட்டோ சவாரிகள் தான். விரைவில் டாக்ஸி புக்கிங்கை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தும்.
இந்த சவாரிகள் மூலம் நம்ம யாத்ரி டிரைவர்களுக்கு சப்ஸ்கிரிப்ஷன் மாடல் மூலம் பணம் சம்பாதித்தது. ஒவ்வொரு டிரிப்புக்கும் இது பணம் பிடித்தம் செய்வதில்லை. ஆனால் அதற்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் செய்யும் முறை அமலாகும் எனத் தெரிகிறது.
பேடிஎம் ஆப்பில் உள்ள ஓஎன்டிசி அம்சங்கள் பாய் பிளாட்பார்ம் மூலம் இயக்கப்படுகிறது. இதுவரை 11.8 மில்லியன் பயனாளர்கள் ஓஎன்டிசியில் பேடிஎம் மூலம் ஷாப்பிங் செய்துள்ளதாக பாய் பிளாட்பார்ம் நிறுவனர் விஜய் ஷர்மா கூறியுள்ளார்.
இதனிடையே பின்கோடு என்ற ஷாப்பிங் ஆப் ஓஎன்டிசியில் பேடிஎம்மின் போட்டியாளரான போன்பே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இதுவரை 1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் டவுண்லோடு செய்துள்ளனர்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications