வங்கிகளுக்கு போட்டியாக பேடிஎம்.. ரூ.34000 கோடி வர்த்தகம், வியக்க வைக்கும் வளர்ச்சி..!

இந்தியாவில் டிஜிட்டல் வங்கி சேவை தளம் மேகமாகவும், பெரிய அளவிலும் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அனைத்துத் தரப்பு நிறுவனங்களுக்கும், அமைப்புகளுக்கும் வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

இதில் முக்கியமாகப் பேமெண்ட் சேவை நிறுவனங்களுக்குப் பல பிரிவுகளில் வர்த்தகமும், வருமானமும் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை தளத்தின் முன்னோடியாக விளங்கும் பேடிஎம் தற்போது வங்கிகளுக்கு இணையாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரையில் பெரும் நஷ்டத்துடன் போராடி வந்த பேடிஎம் தற்போது லாபத்தை நோக்கி பயணிக்கத் துவங்கியுள்ளது.

ஓன் 97 கம்யூனிகேஷன்ஸ்

ஓன் 97 கம்யூனிகேஷன்ஸ்

ஓன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பிராண்டு தான் பேடிஎம். இந்நிறுவனம் சில காலாண்டுகளுக்கு முன்பாகக் கடன் வழங்கும் வர்த்தகத்தைப் பிற வங்கி அமைப்புகளுடன் இணைந்து துவங்கியது, சில தடுமாற்றத்துடன் துவங்கிய கடன் வர்த்தகம் தற்போது பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

 34000 கோடி ரூபாய் கடன் வர்த்தகம்

34000 கோடி ரூபாய் கடன் வர்த்தகம்

பேடிஎம் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனது கடன் வர்த்தகம் 17 சதவீதம் வளர்ச்சி (ARR) அடைந்து செப்டம்பர் மாத முடிவில் சுமார் 34000 கோடி ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இதன் அளவு 29000 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

92 லட்சம் வாடிக்கையாளர்கள்

92 லட்சம் வாடிக்கையாளர்கள்

கடந்த வருடம் இதே செப்டம்பர் காலாண்டில் 28 லட்சம் பேருக்கு மட்டுமே கடன் கொடுத்திருந்த பேடிஎம், ஒரு வருடத்தில் 3 மடங்கு வளர்ச்சி அடைந்து செப்டம்பர் காலாண்டில் 92 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல் கடன் 1257 கோடி ரூபாயில் இருந்து 7313 கோடி ரூபாய் என்ற 6 மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

39 சதவீத வளர்ச்சி

39 சதவீத வளர்ச்சி

இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் கடன் வர்த்தகத்தின் சராசரி எண்ணிக்கை 7.97 கோடியாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் இதன் எண்ணிக்கை 39 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

வங்கிகள் Vs பேடிஎம்

வங்கிகள் Vs பேடிஎம்

பேடிஎம் நிறுவனத்தின் கடன் அனைத்தும் சிறிய அளவிலான கடன் மட்டுமே வீட்டுக் கடன், வாகன கடன், போன்ற பெரிய தொகை கொண்ட கடன்கள் அல்ல. இதனால் கடன் தொகை குறைவாக இருந்தாலும் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை வங்கிகளுக்கு இணையாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+