பெங்களூரு: இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பேடிஎம் நிறுவனம் பல்வேறு தொழில்முனைவோர்களையும் உருவாக்கியுள்ளது.
தற்போது பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கும் பேடிஎம் நிறுவனத்தில் இதற்கு முன்பு பணியாற்றிய ஊழியர்கள் சுமார் 22 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருவது பிரைவேட் சர்க்கிள் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப்களின் மொத்த மதிப்பு ரூ.10,668 கோடி ஆகும்.

பேடிஎம் நிறுவனத்தின் முன்னாள் மேலாளராக இருந்த ரோகன் நாயக் பாக்கெட் எஃப்.எம்.- இன் நிறுவனர் ஆவார். அதேபோல பேடிஎம் வாலட்டுக்கு தலைமை பதவி வகித்து வந்த அமித் லக்கோடியா பார்க் பிளஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.
பேடிஎம் நிறுவனத்தில் இதற்கு முன்பு பணியாற்றி வந்து தீபக் ஆபட் மற்றும் நித்தின் மிஸ்ரா ஆகியோர் இணைந்து உருவாக்கியது தான் இந்தியா கோல்ட் என்ற தங்க கடன் வழங்கும் தளமாகும் .
பேடிஎம் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களால் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் பள்ளி மாணவர்களுக்கான டிஜிட்டல் பாக்கெட் மணி தளமான ஜூனியோ, ஆடியோ டேட்டிங் பிளாட்பார்ம் ஆன ஃபிரண்டு, கண்ணாடி பிராண்ட்டான க்ளியர் தேகோ, வயதானவர்களுக்கான கிளப் என அழைக்கப்படும் ஜென்வைஸ் கிளப், காலணி நிறுவனமான யோகோ, வென்டிங் இயந்திரங்களை விற்பனை செய்யும் டால்ஷினி மற்றும் சைபர் செக்யூரிட்டி தொடர்பான பிராக்டிகல் டெக் ஆகியவையும் அடங்கும்.
பேடிஎம் முன்னாள் ஊழியர்கள் உருவாக்கிய இந்த 24 ஸ்டார்ட் அப் களில் 24 சதவீத ஸ்டார்ட் அப்புகள் பினான்சியல் செக்டாரை சேர்ந்தவை. குறிப்பாக ஈ-காமர்ஸ், மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் மற்றும் சாப்ட்வேர் சேவை வழங்கும் நிறுவனங்களாக இருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் மூலம் நாடு முழுவதும் 2500க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பது ப்ரைவேட் சர்க்கிள் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தெரிய வந்துள்ளது.
வழக்கமான ஃபிளிப்கார்ட் நிறுவன முன்னாள் ஊழியர்களை தான் மாஃபியா என்று அழைக்கப்படுவர்.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் உருவாக்கிய நிறுவனங்களான போன் பே, குரோ, நவி, க்யூர் ஃபுட்ஸ் ஆகிய நிறுவனங்களின் மொத்த மதிப்பு 24.6 பில்லியன் ஆகும். பெரும்பாலான இந்த நிறுவனங்கள் ஃபிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட்டுக்கு விற்பனை செய்யப்பட்ட பிறகு அங்கிருந்து வெளியேறியவர்களால் தொடங்கப்பட்டவை ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications