சென்னை: ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான பேடிஎம் மணி பிஸ்டம் புரோக்கிங் டிவிஷன் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவான ராகேஷ் சிங்கை புதிய சிஇஓவாக நியமிக்க உள்ளது. அதன் சிஇஓ வருண் ஸ்ரீதர் தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மொபைல் பேமெண்ட்ஸ் நிறுவனமான பேடிஎம் ராகேஷ் சிங்கை பதவியில் நியமிப்பது தொடர்பான போர்டு மீட்டிங்கை இன்னும் கூட்டவில்லை. போர்டு ஒப்புதல் பெற இன்னும் ஒரு வாரம் பிடிக்கும் எனத் தெரிகிறது. ஒரு நிறுவனத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும்போது பெரிய பதவியில் இருப்பவர்கள் பதவியை ராஜிநாமா செய்வது சகஜம்.

ஸ்ரீதர் பேடிஎம்மில் தொடர்வார். அவரை பேடிஎம் இன்ஸ்சூரன்ஸ்ஸுக்கு மாற்றுவததற்கான ஆலோசனைகள் நடைபெறுகின்றன. அல்லது பிரதான பேமெண்ட்ஸ் டிவிஷனுக்கு மாற்றலாம் எனத் தெரிகிறது. பேடிஎம்மின் சிஇஓவாக ஸ்ரீதர் நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
2023 நிதியாண்டில் நிறுவனம் ரூ.42 கோடி நிகர லாபத்தை அடைநத்து. அதன் வருவாய் கிட்டத்தட்ட இருமடங்காகி ரூ.131 கோடியானது. நிறுவனத்தின் பெரும்பாலான வருவாய் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் புரோக்கரேஜ் கட்டணத்தின் மூலம் வருகிறது.
ஸ்ரீதரின் ராஜிநாமா மற்றும் சிங்கின் நியமனம் குறித்து பேடிஎம் எந்த விளக்கத்தையும் தரவில்லை. பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கின் முகுந்த் பார்சாகடே லெண்டிங்கார்ட்டின் குரூப் சிஎப்ஓவாக வேலைக்குச் சேர்கிறார். வங்கித் துறையில் நிறைந்த அனுபவம் உள்ளவர் ராகேஷ் சிங். 18 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள சிங் பிஸ்டம்மில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார்.
மூன்று மாதங்களுக்கு முன்பாக ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது பல்வேறு முட்டுக்கட்டைகளை சுமத்தியது. இதனால் பேடிஎம் நிறுவனம் நிதிரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டது. பேடிஎம் மணியையும் கடுமையாக பாதித்தது. வெல்த் மேனெஜ்மென்ட் நிறுவனமான பேடிஎம் மியூச்சுவல் ஃபண்ட், சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்களை விற்று வருகிறது. அத்துடன் டிரேடிங்கையும் செய்து வருகிறது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications