சென்னை: பேடிஎம் நிறுவனத்தை இயக்கும் அதன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு செபி நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து திங்கட்கிழமை மாலை ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் சார்பாக விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த விஷயம் குறித்து நிறுவனம் ஏற்கனவே தனது மார்ச் மற்றும் ஜூன் முடிவடைந்த காலாண்டுகளுக்கான நிதி முடிவுகளில் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த விளக்கம் மேலும், "ஜூன் 30, 2024 மற்றும் மார்ச் 31, 2024 ஆகிய முந்தைய காலாண்டுகளுக்கான நிதி முடிவுகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்று முதலீட்டாளர்களுக்கும் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் இந்த விளக்கம் மூலம் கூறியுள்ளது.

செபி அனுப்பிய நோட்டீஸ்-ல் விஜய் சேகர் ஷர்மா ப்ரோமோட்டராக வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமா என்ற முக்கியமான கேள்வியை சுற்றி பல கேள்விகள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் IPO ஆவணங்களை தாக்கல் செய்யும் போது அவர் ஒரு ஊழியராக இல்லாமல் நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார்.
ஏனெனில் SEBI விதிகளின் படி ப்ரோமோட்டர் IPOக்குப் பிறகு ESOP-களைப் பெறத் தடை விதிக்கின்றன. இந்த விசாரணை ரிசர்வ் வங்கியின் (RBI) தரவுகளின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. RBI முன்னதாக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை ஆய்வு செய்தது மூலம் நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து செபிக்கு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக செபி இன்று அனுப்பிய நோட்டீஸ் மூலம் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளது.
மார்ச் 31, 2022 முடிவடைந்த ஆண்டில் நிறுவனம் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு 21,000,000 ஊழியர் பங்கு விருப்பங்களை வழங்கியது. இது குறிப்பிட்ட வர்த்தக மைல்கற்களை அடைந்தது மூலம் வழங்கப்பட்டது. முந்தைய காலாண்டில், நிறுவனம் SEBI-யின் SBEB விதிகளுக்கு இணங்குவது தொடர்பாக SEBI-யிடமிருந்து நோட்டீஸ் பெற்றது. ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது ஆரம்ப பதிலை சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக SEBI-யிடமிருந்து கூடுதல் தகவல் பெறுவதற்காக புதிய நோட்டீஸை அனுப்பியுள்ளது.
பேடிஎம் பங்கு மும்பை பங்குச்சந்தையில் இன்று ரூ.530.05 ஆக முடிந்தது. இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் பேடிஎம் பங்குகள் சுமார் ரூ. 24 குறைந்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications