இந்தியாவின் முன்னணி நிதி மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான பேடிஎம்-இன் கிளை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் தனது நிர்வாகம் மற்றும் சேவையில் விதிமீறல்கள் செய்துள்ளதை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்துள்ளது.
இதற்காக ரிசர்வ் வங்கி, விதிமீறல்களுக்கு ஏற்ப தனித்தனியாகப் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் மீது சுமார் 1 கோடி ரூபாய் வரையிலான அபராதம் விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி தற்போது அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் சேவை தளங்கள் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் விதிமீறல்கள், விதிகளை முறையாக நடைமுறைப்படுத்தாத அல்லது விதிகளை முழுமையாகப் பூர்த்திச் செய்யாதவர்களை கண்டுபிடித்து கடுமையான அபராதம் விதிப்பது மட்டும் அல்லாமல் மக்களுக்கு இதை வெளிப்படையான முறையில் அறிவிக்கிறது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி
இதன்படி பேடிஎம் நிறுவனம் தனது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயலியை அறிமுகம் செய்யும் முன்பு ரிசர்வ் வங்கியிடம் இறுதி ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்து இருந்தது. ஆனால் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம் சமர்ப்பித்த தரவுகளுக்கும் உண்மையான சேவைகளுக்கும் மாறுபாடு இருந்ததை ரிசர்வ் வங்கி கண்டுப்பிடித்தது.
PSS விதி
இது PSS விதி பிரிவு 26 (2) கீழ் விதிமீறல் என அறிவுறுத்தி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியிடம் இதற்கான விளக்கத்தை வாய் மொழியிலும், எழுத்துப்பூர்வமாகவும் பெற்ற பின்னர் ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
வெஸ்டர்ன் யூனியன் சேவை
இதேபோல் வெஸ்டர்ன் யூனியன் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைந்து பேடிஎம் அளிக்கும் கிராஸ் பார்டர் இன்பவுண்ட் சேவைகளில் MTSS விதிமுறைகளில் சிலவற்றை முழுமையாகக் கடைப்பிடிக்காத நிலையில் இதற்குத் தனியாக 27 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
30 முறை
வெஸ்டர்ன் யூனியன் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைந்து பேடிஎம் அளிக்கும் சேவையில் ஒருவர் ஒரு வருடத்திற்கு 30 முறை மட்டுமே இச்சேவையைப் பயன்படுத்த வேண்டும். இதைப் பேடிஎம் மீறியுள்ளது. இதற்காக வெஸ்டர்ன் யூனியனும் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications