ஐபிஓ கனவில் இருக்கும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேடிஎம் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுத் தற்போது முதலீட்டாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. செப்டம்பர் 2021 உடன் முடிந்த காலாண்டில் கடந்த ஆண்டை விடவும் அதிகப்படியான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
இதனால் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் போது பேடிஎம் பங்குகள் மீண்டும் சரியுமா என்ற கேள்வி தான் தற்போது அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்கள் எழுந்துள்ளது.
ஓமைக்ரான் வைரஸ் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் திங்கட்கிழமை வர்த்தகமும் சரிவுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேடிஎம் நிறுவனம்
பேடிஎம் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் சுமார் 481.70 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. இது ஜூன் காலாண்டில் 376.60 கோடி ரூபாயாக இருந்தது, கடந்த நிதியாண்டில் 435.50 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பேடிஎம் வருவாய் அளவீடு
ஒருபக்கம் நஷ்டத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் பேடிஎம் நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவீடு 64 சதவீதம் உயர்ந்து 1,086.40 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதன் அளவு வெறும் 663.90 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
யூபிஐ அல்லாத பேமெண்ட்
இக்காலாண்டில் பேடிஎம் நிறுவனத்தின் யூபிஐ அல்லாத பேமெண்ட் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது, இதேபோல் நிதியியல் சேவை மற்றும் இதர வருவாய் அளவீடுகள் 3 மடங்கு அதிகரித்துள்ளது எனப் பேடிஎம் தெரிவித்துள்ளது. பேடிஎம் தனது வருமானம் மற்றும் லாப அளவீடுகளை முதல் முறையாகப் பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.
வருமான வளர்ச்சி
மேலும் பேடிஎம் நிறுவனத்தின் பேமென்ட்ஸ் மற்றும் நிதியியல் சேவை பிரிவு வருமானம் 69 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 842.60 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் காமர்ஸ் மற்றும் கிளவுட் சேவை பிரிவு வருமானம் 47 சதவீதம் வளர்ச்சி அடைந்து 243.80 கோடி ரூபாயாக உள்ளது.
நஷ்டத்திற்கு இதான் காரணம்
பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் பெரிய அளவில் உயர்ந்திருந்தாலும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அதிகப்படியான தொகையைச் செலவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் லாபத்தைப் பெற முடியாமல் நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications