டிஜிட்டல் நிதி நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு நிறுவனமாகச் செயல்பட உள்ளதாகவும், அதற்காக அடுத்த 10 வருடத்தில் 950 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
மேலும் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா மீண்டும் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கிறார் என பங்குச்சந்தைக்குத் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விஜய் சேகர் ஷர்மா பேடிம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக 2022, டிசம்பர் 19-ம் தேதி முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறார்.
விவசாயிகள் நிதி உதவி எப்போது கிடைக்கும்? உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? செக் செய்வது எப்படி?

பேடிஎம் ஜெனரல் இன்சூரன்ஸ்
பேடிஎம், ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கூட்டணி நிறுவன பெயரை பேடிஎம் ஜெனரல் இன்சூரன்ஸ் என அறிவித்துள்ளனர்.

உரிமை
ஆரம்பத்தில், ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் (OCL) பேடிஎம், ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளை வைத்திருக்கும். மீதமுள்ள 51 சதவீத பங்குகள் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிர்வாக இயக்குநர் விஜய் சேகர் ஷர்மாவுக்கு சொந்தமான விஎஸ்எஸ் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் (VHPL) க்கு சொந்தமானதாக இருக்கும்.

முதலீட்டிற்குப் பிறகு
முதலீட்டிற்குப் பிறகு, பேடிஎம் ஜெனரல் இன்சூரன்ஸில் பேடிஎம் 74 சதவீத பங்குகளை வைத்திருக்கும், VHPL-ன் பங்குகளை 26 சதவீதமாகக் குறைக்கப்படும்.

பேடிஎம் காலாண்டு முடிவுகள்
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு அறிக்கையை வெளியிட்ட பேடிஎம் நிறுவனம் 761,4 கோடி ரூபாய் நட்டம் அடைந்தாக தெரிவித்துள்ளது. இதே காலாண்டில் சென்ற ஆண்டு 441.8 கோடி ரூபாய் நட்டம் அடைந்திருந்தது. கடந்த ஒரு ஆண்டில் பேடிஎம் நிறுவனம் மொத்தமாக 2,396 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளது.

அலிபாபா & ஆண்ட் ஃபினான்ஷியல்
பேடிஎம் நிறுவனத்தில் மிகப் பெரிய முதலீடுகளைச் செய்து இருந்த சீன நிறுவனமான அலிபாபா மற்றும் ஆண்ட் ஃபினான்ஷியல் நிறுவனங்கள் வெளியேறியதால் பேடிஎம்-ன் சந்தை மதிப்பு பெரும் அளவில் சரிந்தது.

ஹாரூன் யூனிகார்ன் பட்டியல்
2020-ம் ஆண்டு பேடிஎம் நிறுவன மதிப்பு 3 பில்லியன் டாலர் என அறிவிக்கப்பட்டது. அதுவே 2022 ஹாரூன் யூனிகார்ன் பட்டியலில் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் டாலருக்கு குறைவாகச் சரிந்து, யூனிகார்ன் மதிப்பையும் இழந்துள்ளது என தெரிவித்திருந்தது.