நாட்டின் முன்னணி நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் 3 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்க்க ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு வரும் நிலையில், தனது வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து புதிய சேவைகள் அறிமுகம் செய்து வருகிறது பேடிஎம்.
தற்போது பேடிஎம் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே ரூபே மற்றும் விர்ச்சுவல் டெபிட் கார்டு அளித்து வரும் நிலையில் தற்போது விசா டெபிட் கார்டுகளை வழங்கு முடிவு செய்துள்ளது.

இப்புதிய விசா டெபிட் கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் இருக்கும் 50 லட்சம் விசா பாயின்ட்களிலும், டேப் அண்ட் பே சேவையை எளிதாகப் பயன்படுத்த முடியும் எனப் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் தெரிவித்துள்ளது. விசா கார்டு என்பதால் 100 சதவீத இடங்களில் வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியும்.
பேடிஎம் இதுவரை 45 லட்சம் விர்ச்சுவல் டெபிட் கார்டுகளை அளித்துள்ளது. இந்நிலையில் இந்த வருடத்தின் இறுதிக்குள் கூடுதலாக 10 லட்சம் டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது பேடிஎம்.


Click it and Unblock the Notifications