இந்தியாவிலேயே காட்பாடி தான் பெஸ்ட்.. பேடிஎம் கொடுத்த புதிய அங்கிகாரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தலைநகராக டெல்லி-என்சிஆர் பகுதி உருவெடுத்துள்ளது, இதேவேளையில் தமிழ்நாட்டில் காட்பாடி 2022 ஆம் ஆண்டில் 7 மடங்கு வளர்ச்சியுடன் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உருவெடுத்துள்ளது.

 

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணம் பரிமாற்ற சேவை மற்றும் நிதிச் சேவை நிறுவனமான Paytm-ன் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையில் அசத்தும் டாப் நகரங்களைப் பட்டியலிட்டு உள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் நிதியியல் சேவை வளர்ச்சியில் பேடிஎம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.மோடி அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த நாளில் இருந்து பேடிஎம் இந்தியாவின் முக்கிய நகரமாக மாறியது.

18000 ஊழியர்கள் நடுத்தெருவுக்கு வந்தனர்.. இப்படியொரு நிலை யாருக்கும் வர கூடாது..! 18000 ஊழியர்கள் நடுத்தெருவுக்கு வந்தனர்.. இப்படியொரு நிலை யாருக்கும் வர கூடாது..!

டிஜிட்டல் பேமெண்ட் சேவை

டிஜிட்டல் பேமெண்ட் சேவை

மக்கள் பணத் தேவைக்காக ஏடிஎம்களுக்குச் செல்ல வேண்டியுள்ள நிலையில் பேடிஎம் தனது டிஜிட்டல் பேமெண்ட் சேவை மூலம் மக்கள் ஏடிஎம் செல்வதைச் சுமார் 1,618,796,629 முறை தடுத்துள்ளது எனத் தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

8 திசைகள்

8 திசைகள்

பேடிஎம் நிறுவனம் இந்தியாவில் 8 திசைகளிலும் தனது டிஜிட்டல் பணம் பரிமாற்ற சேவைகளும், நிதிச் சேவைகளையும் அளித்து வருகிறது. மேலும் சிறிய நகரங்கள் மற்றும் டவுன் பகுதிகளில் இருந்து டிஜிட்டல் பேமெண்ட் சந்தைக்குள் வரும் புதிய யூசர்களில் மூன்றில் இருவர் பேடிஎம் சேவையைப் பயன்படுத்துபவராக உள்ளனர் எனப் பேடிஎம் தெரிவித்துள்ளது.

Paytm 2022 Recap அறிக்கை
 

Paytm 2022 Recap அறிக்கை

ஓன்97 கம்யூனிகேஷனஸ் வெளியிட்ட Paytm 2022 Recap அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் பேடிஎம் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் முக்கியமான விஷயங்களைத் தொகுத்து அறிக்கையாக வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான பேமெண்ட் முறைகளில் Paytm UPI அதிவிரைவு மற்றும் பாதுகாப்பான பணம் செலுத்தும் முறைகளில் ஒன்றாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

7.23 மணி

7.23 மணி

2022 ஆம் ஆண்டில் பேடிஎம் தளத்தில் செய்யப்பட்ட மொத்த பேமெண்ட்-ஐ ஆய்வு செய்த போது நாடு முழுவதிலும் இருந்து வரும் மக்கள் பேடிஎம் தளத்தில் அதிக எண்ணிக்கையிலான பேமெண்ட்-ஐ மாலை 7.23 மணிக்குச் செய்துள்ளனர். மேலும் பேடிஎம் தளத்தில் வாரத்தில் மிகவும் பரபரப்பான நாளாகப் புதன்கிழமை ஆக உள்ளது.

ராகுல் மற்றும் பூஜா

ராகுல் மற்றும் பூஜா


மேலும் பேடிஎம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகப்படியானோர்-க்கு ராகுல் மற்றும் பூஜா எனப் பெயர் கொண்டு உள்ளனர் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் திருச்சி

சென்னை மற்றும் திருச்சி

ஆஃப்லைன் பேமெண்ட்-ல் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்கள் தான் உணவு மற்றும் குளிர் பானங்களுக்கான அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அமிர்தசரஸ் Paytm மூலம் ஹெல்த் மற்றும் குரூம்மிங் பிரிவுக்காக அதிகம் செலவுகளைச் செய்துள்ள நகரமாக உள்ளது.

நொய்டா மற்றும் நாக்பூர்

நொய்டா மற்றும் நாக்பூர்

நொய்டா மற்றும் நாக்பூர் ஆகியவை தெருவோர விற்பனையாளர்களுக்கு Paytm மூலம் அதிக எண்ணிக்கையிலான பேமெண்ட்களைக் கொண்டு உள்ளது. வடகிழக்கு இந்திய பகுதிகளில் Paytm-ன் வர்த்தகச் சந்தையும் பெரிய வளர்ச்சியைக் கண்டது.

UPI பரிவர்த்தனை

UPI பரிவர்த்தனை

UPI பரிவர்த்தனைகளுக்காக வடகிழக்கில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள லோஹித், தெற்கு சிக்கிம் மற்றும் ராணிபூல், மற்றும் அசாமின் குவ்ஹாத்தி, திப்ருகார், ஜோர்ஹட் மற்றும் கம்ரூப் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

20 மாநிலங்களில் பேமெண்ட்

20 மாநிலங்களில் பேமெண்ட்

ஒரு பேடிஎம் வாடிக்கையாளர் 20 மாநிலங்களில் 106 நகரங்களில் பேமெண்ட் செய்து புதிய சாதனை படைத்துள்ளார். மற்றொரு பேடிஎம் வாடிக்கையாளர் Paytm செயலியைப் பயன்படுத்தி மும்பை - டெல்லி இடையே 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 358 முறை விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.

ரூ.2800 கோடி முதலீடு.. தட்டி தூக்கிய உத்தரப் பிரதேசம்.. தமிழ்நாடு கையில் 5..!ரூ.2800 கோடி முதலீடு.. தட்டி தூக்கிய உத்தரப் பிரதேசம்.. தமிழ்நாடு கையில் 5..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paytm says Tamil Nadu's Katpadi is the fastest growing city for digital payments in India

Paytm says Tamil Nadu's Katpadi is the fastest growing city for digital payments in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X