மார்ச் 15 2024க்குப் பிறகு சில குறிப்பிட்ட சேவைகளுக்கு பேடீஎம் பேமென்ட்ஸ் வங்கிச் சேவையை வாடிக்கையாளர்கள் இனி பயன்படுத்த முடியாது.
மார்ச் 15, 2024க்குப் பிறகு, பேடீஎம் பேமென்ட்ஸ் வங்கி புதிய டெபாசிட்கள் அல்லது டாப்-அப்களை ஏற்றுக்கொள்வது தடுக்கப்படும்.
தொடர்ந்து விதிகளுக்குக் கட்டுப்படாதது மற்றும் மெட்டீரியல் சூப்பர்வைசரி கவலைகள் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான தடையை விதித்துள்ளது.

நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அமைப்பு, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்-க்கு பல்வேறு வங்கி மாதிரி அடிப்படையில் மூன்றாம் தரப்பு பயன்பாடு வழங்குநராக (TPAP) யூபிஐ சேவையில் தொடர்ந்து பங்கேற்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஒப்புதல் படி ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யெஸ் வங்கி ஆகிய நான்கு வங்கிகள், பேடிஎம் நிறுவனத்திற்குப் பணம் செலுத்தும் முறை வழங்குநராக (PSP) செயல்பட்டு, யூபிஐ சேவையை வலுப்படுத்தும்.
இதனால் மார்ச் 15 முதல் நீங்கள் பெறக்கூடிய மற்றும் பெற முடியாத பேடீஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவைகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
மார்ச் 15க்குப் பிறகு நீங்கள் பெறக்கூடிய சேவைகளின் பட்டியல்:
* பேடீஎம் பேமென்ட்ஸ் வங்கியிலிருந்து பணத்தை எடுக்கவும் ரீஃபண்ட், கேஷ்பேக், பார்ட்னர் வங்கிகளில் இருந்து ஸ்வீப்-இன் அல்லது வட்டி ஆகியவை உங்கள் கணக்கில் அனுமதிக்கப்படும்.
* மார்ச் 15க்குப் பிறகு மாதாந்திர மின்சாரக் கட்டணம் ஆட்டோ டிடெக்ஷன் செய்யப்படும்.
* வித்டிராயல்/டெபிட் மேன்டேட்கள் (National Automated Cleaning House ஆணைகள் போன்றவை)
* மாதாந்திர ஓடிடி சந்தா யூபிஐ வாயிலாக பேடீஎம் பேமென்ட்ஸ் வங்கியின் கணக்கு மூலம் தானாகவே செலுத்தப்படும்.
* கடன் தவணைகள், பேடீஎம் வாலட் ரீபண்டு, கேஷ்பேக்
* பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் கேஷ்பேக்குகள் குளோஸ்டு வாலட்களில் வரவு வைக்க அனுமதிக்கப்படுகிறது
* இருப்புத்தொகையை மாற்றவும்
* பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வழங்கிய ஃபாஸ்டேக்
* பேடீஎம் பேமென்ட்ஸ் வங்கி கணக்கிலிருந்து UPI/ IMPS மூலம் பணத்தை எடுக்கவும் முடியும்.
மார்ச் 15க்குப் பிறகு நீங்கள் பயன்படுத்த முடியாத சேவைகளின் பட்டியல்:
* இந்த வாலட்டில் டாப்-அப் அல்லது பணத்தை மாற்றவும்
* இந்த பணப்பையில் வேறு எந்த நபரிடமிருந்தும் பணத்தைப் பெறலாம்.
* பேடீஎம் பேமென்ட்ஸ் வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றலாம்.
* பேடீஎம் பேமென்ட்ஸ்வங்கியில் சம்பளக் கடன்
* மானியம் அல்லது குறிப்பிட்ட நேரடி பலன் பரிமாற்றங்கள்
* ஃபாஸ்ட்டேக் இருப்பை ரீசார்ஜ் செய்யலாம்.
* பேடீஎம் பேமென்ட்ஸ் வங்கி வழங்கிய பழைய ஃபாஸ்ட்டேக்கிலிருந்து புதிய ஃபாஸ்ட்டேக்குக்கு பேலன்ஸை மாற்றலாம்.
* UPI/ IMPS மூலம் பேடீஎம் பேமென்ட்ஸ் வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றலாம்.
* எனவே வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள தடை உத்தரவை மனதில் வைத்து மேலே குறிப்பிட்டபடி தங்களுக்குத் தேவையான சேவைகளை பேடீஎம் பேமென்ட் வங்கி மூலம் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Story Written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications