இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம்-ன் தாய் நிறுவனமாக ஓன் 97 கம்யூனிகேஷனஸ் பங்குகள் இன்று 2 சதவீதம் உயர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் 18 மாத உயர்வை தொட்டு உள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் ஐபிஓ முயற்சிகள் இன்றளவும் பெரிய டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஐபிஓ வெளியிட பயமுறுத்துகிறது என்றால் மிகையில்லை.
இந்த நிலையில் கடந்த சில காலாண்டுகளாக பேடிஎம் வர்த்தகம், வருவாய் வளர்ச்சியில் சிறப்பான செயல்திறனை வெளிகாட்டி வருகிறது. இதனால் விரைவில் லாபகரமான நிலைக்கு மாறும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பெர்ன்ஸ்டீன் வெளியிட்டுள்ள அறிக்கை தான் இன்று ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

உலகளவில் பிரபலமான ப்ரோகரேஜ் நிறுவனமான பெர்ன்ஸ்டீன் பேடிஎம்-ன் தாய் நிறுவனமாக ஒன்97 கம்யூனிகேஷனஸ் பங்குகளுக்கு அவுட்பர்பார்ம் ரேட்டிங் கொடுத்து டார்கெட் விலையாக 1100 ரூபாயை கொடுத்துள்ளது. இதன் மூலம் பேடிஎம் பங்குகள் 22 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளது, கடந்த 3 வர்த்தக நாளில் மட்டும் கிட்டத்தட்ட 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
பேடிஎம் பங்குகள் இன்று 0.18 சதவீதம் உயர்ந்து 907.25 ரூபாய் விலையில் வர்த்தகம் செய்யப்படும் வேளையில் பெர்ன்ஸ்டீன் பேடிஎம் பங்குகள் 1100 ரூபாய் வரையில் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் முதலீடு செய்வதற்கான எண்ணத்தை தூண்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 2 சதவீதம் வரையில் உயர்ந்து 931.00 ரூபாய் வரையில் உயர்ந்து 18 மாத உச்சத்தை தொட்டு உள்ளது.
ஜூன் காலாண்டில் பேடிஎம் தளத்தின் வாயிலாக 1.28 கோடி பேருக்கு 14,845 கோடி ரூபாய் அளவிலான கடனை கொடுத்துள்ளது. இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 51 சதவீதம் அதிகமாகும். மேலும் பேமென்ட் சேவையில் மார்ஜின் அளவுகளை சரி செய்து வருகிறது பேடிஎம்.


Click it and Unblock the Notifications