இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் துறை வளர்ச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்த பேடிஎம் தற்போது அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. சமீபத்தில் ஆர்பிஐ பேடிஎம் பேமெண்ட் பேங்க் உரிமத்தை ரத்து செய்வதாகத் தகவல் வெளியான நிலையில் இன்று காலை முதல் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் பங்குகள் லோவர் சர்கியூட்டில் லாக் ஆகி 10 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது.
மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது, அதன் நிறுவனர் விஜய் சேகர் சர்மா பணச் சலவையில் ஈடுபட்டதாகவும், அமலாக்கத் துறை ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியானது, இதை ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் முற்றிலும் தவறான தகவல் என விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது, அதன் நிறுவனர் விஜய் சேகர் சர்மா பணச் சலவையில் ஈடுபட்டதாகவும், அமலாக்கத் துறை ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியானது, இதை ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் முற்றிலும் தவறான தகவல் என விளக்கம் கொடுத்துள்ளது.
இன்றைய சரிவுக்கு முக்கியமான காரணம், ப்ளூம்பெர்க் பத்திரிக்கை அடுத்த மாதத்திற்குள் ஆர்பிஐ பேடிஎம் பேமெண்ட் பேங்க்-ன் வங்கி உரிமத்தை ரத்து செய்யும் எனத் தெரிவித்தது. இதேவேளையில் வர்த்தக அமைப்புகள், இந்தியாவில் இருக்கும் வர்த்தகர்களைப் பேடிஎம் பேமெண்ட் ஆப்ஷனை பிற பேமெண்ட் தளத்திற்கு மாற்ற கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
இதேவேளையில் பங்குச்சந்தை ப்ரோகரேஜ் நிறுவனங்களான ஜெப்ரீஸ் பேடிஎம்-ன் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்கு மதிப்பின் டார்கெட் விலையை 500 ரூபாயாகக் குறைத்துள்ளது. Macquarie 650 ரூபாயாகக் குறைத்துள்ளது. தற்போது 438.35 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது, இதோடு மோதிலால் ஆஸ்வால் பேடிஎம் பங்குகளுக்கு watchful stance என்ற தகுதியைக் கொடுத்துள்ளது.
மேலும் பேடிஎம் நிர்வாகம் கடைசியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் பணச் சலவை தொடர்பான எவ்விதமான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ளது. அனைத்து இந்திய சட்டம் மற்றும் ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடித்து வருகிறோம் என விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த அனைத்து பிரச்சனைக்கும் துவக்கப்புள்ளி இதுதான். நிதியியல் தளங்கள் மற்றும் பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு மத்தியில் முறைக்கேடாகவும, சந்தேகத்திற்கு இடமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி பரிமாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதை ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது.
இதேபோல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி KYC விதிகளைப் பூர்த்திச் செய்யாத பல லட்சம் கணக்குகளில் இருந்து பேமெண்ட்களைப் பிராசஸ் செய்துள்ளது. இதேபோல் ஒரே பான் கார்டு வைத்து பல கணக்குகள் திறக்க பயன்படுத்தப்பட்ட 1000த்திற்கும் அதிகமான வழக்குகள் உள்ளதையும் ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications