சென்னை: இந்தியாவின் முன்னணி பேமெண்ட் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுக்கு, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி விதிமுறைகளை மீறியதற்காக ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் 8.88% குறைந்து ரூ.505.25க்கு வந்துள்ளது.
ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா மற்றும் 2021 நவம்பரில் நடந்த அதன் ஐபிஓ-வுக்கு பொறுப்பான இயக்குநர்களுக்கு, தவறான தகவல் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுப்பி செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய் சேகர் ஷர்மா மீது பங்குதாரர் வகைப்படுத்தல் விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணை ரிசர்வ் வங்கி (RBI) யின் தரவுகளின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. RBI இந்த ஆண்டு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை ஆய்வு செய்தது, இதன் மூலம் கிடைத்த தகவல் படி இந்த குற்றச்சாட்டு குறித்து செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செபி அனுப்பிய நோட்டீஸ்-ல் விஜய் சேகர் ஷர்மா ப்ரோமோட்டராக வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமா என்ற முக்கியமான கேள்வியின் அடிப்படையில் தான் பல கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் செபி தனது நோட்டீஸ்-ல் எழுப்பியுள்ளது.
ஏனெனில் பேடிஎம் IPO ஆவணங்களைத் தாக்கல் செய்யும் போது விஜய் சேகர் ஷர்மா ஊழியராக இல்லாமல் நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். இதன் விளைவாக, ஷர்மாவின் பதவியையும், அதிகாரத்தையும் ஆதரித்ததது தொடர்பாகச் செபி அந்த நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
IPOக்குப் பிறகு பங்குதாரர்கள் ESOP-களைப் பெறத் தடை விதிக்கும் செபி விதிகளின்படி, விஜய் சேகர் ஷர்மா பங்குச்சந்தையில் பட்டியல் படுத்தப்பட்ட பிறகு ESOP பெற தகுதியற்றவராக இருந்திருப்பார். இந்த விதிமுறையை பேடிஎம் சரியான பின்பற்றவில்லை என தெரிகிறது.
ஒரு நிறுவனம் தன்னை 'தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படுவது' (Professionally Managed) என்று வகைப்படுத்திக் கொள்ளாத வரை, அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் பொதுவாக ப்ரோமோட்டர் தலைமையிலானவை என்று கருதப்படுகின்றன.
ஒரு நிறுவனம் தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படுவதற்குத் தகுதியானதாக இருக்க, அதன் பங்குதாரர்களில் யாருக்கும் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கு இருக்கக்கூடாது மற்றும் எந்தவொரு பங்குதாரரும் கட்டுப்பாட்டைச் செலுத்தக்கூடாது. அதுதான் professionally managed நிறுவனங்களுக்குச் செபி வைத்திருக்கும் அளவுகோல்.
பேடிஎம் நிறுவனத்தின் விஷயத்தில் பார்க்கும் போது, IPO ஆவணத்தைத் தாக்கல் செய்வதற்கு முன், விஜய் சேகர் ஷர்மா தனது பங்கு இருப்பில் 5 சதவிகிதம் VSS ஹோல்டிங்ஸ் டிரஸ்ட் என்ற குடும்ப டிரஸ்ட் அமைப்பிற்கு மாற்றினார்.
இந்த மாற்றத்திற்கு முன், ஷர்மா ஒன் 97 கம்யூனிகேஷனில் 14.6 சதவிகித பங்குதாரராக இருந்தார். இந்த மாற்றத்திற்குப் பிறகு, ஷர்மாவின் பங்கு இருப்பு 9.6% ஆக குறைந்தது. இது விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள 10% வரம்பிற்கு கீழே உள்ளது.
மேலும், ஷர்மா நிறுவனத்தின் இயக்குநராக இருந்ததன் மூலமும், நிறுவனத்தை நடத்துவதில் குறிப்பிட்ட ஆதிக்கத்தை செலுத்தி வந்தார்.
ஐபிஓ ஆவணங்களின் படி, VSS ஹோல்டிங்ஸ் டிரஸ்ட் முழுமையாக ஷர்மாவுக்கு சொந்தமானது. இருப்பினும், முந்தைய ஊடக அறிக்கைகளில், அந்த நிறுவனம் ஷர்மாவுக்கு டிரஸ்ட் வைத்திருக்கும் 5 சதவிகித பங்குதாரம் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை என்று கூறிவந்தது.
இந்த முரண்பாடுகள் குறித்துத் தான் தற்போது செபி கேள்வி எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications