டெல்லி: இதுவரை பேடிஎம் யூபிஐ வாடிக்கையாளர்கள், பேடிஎம் பேமெண்ட் பேங்க்-இன் மூலம் யூபிஐ ஐடிகளை பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் பேடிஎம் பேமெண்ட் பேங்க், சில நாட்களுக்கு முன் ஆர்பிஐ-ஆல் தடை செய்யப்பட்டது. இதன் காரணாமாக, பேடிஎம்-இன் பேரண்ட் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (OCL), பேடிஎம் பயனர்களின், யூபிஐ ஐடிகளை மற்ற கட்டணச் சேவை வழங்கும் (PSP) வங்கிகளுக்கு மாற்றும் செயல்முறையைத் துவங்கியுள்ளது.
இது சம்பந்தமாக, பேடிஎம் யூபிஐ ஐடிகளை வேறு வங்கிகளுக்கு மாற்றுமாறு வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே பாப் - அப் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகும் தங்களது யூபிஐ ஐடிகளை மாற்றாத வாடிக்கையாளர்களுக்கு, அவர்களுடைய ஒப்புதலுடன், வேறு கட்டணச் சேவை வழங்கும் வங்கிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

பேடிஎம் யூபிஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் அக்கௌன்ட்கள், தற்போது வேறு கட்டணச் சேவை வழங்கும் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. பேடிஎம் இன் பார்ட்னர் வங்கிகளான ஆக்ஸிஸ் பேங்க், ஹச்டிஎஃப் சி பேங்க், எஸ்பிஐ பேங்க் மற்றும் எஸ் பேங்க் போன்ற பேங்க்குகளுக்கு, இந்த வாடிக்கையாளர்களின் யூபிஐ ஐடிகளை மாற்றம் செய்ய OCL தொடங்கியுள்ளது. மேலும் பேடிஎம் ஆப் மூன்றாம் தரப்பு செயலியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது @paytm என்ற யூபிஐ ஐடிகளை பயன்படுத்தும் அனைத்து பயனர்களும் இப்போது, பேடிஎம் பார்ட்னர் வங்கிகளின் UPI ஐடிகளுக்கு மாற்றப்படுவார்கள். @ptsbi, @pthdfc, @ptaxis, @ptyes என புதிய UPI ஐடிகளுக்கு மாற இருக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள வங்கிகளில் ஒன்றிற்கு உங்கள் யூபிஐ ஐடிகளை மாற்றுமாறு பேடிஎம் உங்களுக்கு செய்தி அனுப்பும். நீங்கள் உங்களுக்கு ஏற்ற வங்கியைத் தேர்ந்தெடுக்கலாம். சான்றாக (yourname@paytm) என்பது (yourname@axis) போன்ற பிற PSP-களுக்கு மாற்றம் செய்யப்படும்.
பேடிஎம், வாடிக்கையாளர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் சுமூகமாக இந்த மற்றம் நடக்க ஏற்பாடு செய்துள்ளது. ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இருப்பினும், பேடிஎம், யூபிஐ ஐடிகளை தனது வாடிக்கையாளர் ஒப்புதலுடன் மட்டுமே புதிய யூபிஐ ஐடிகளுக்கு மாற்றி வருகிறது. பேடிஎம், யூபிஐ ஐடிகளை மாற்ற வேண்டிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பாப் அப் அறிவிப்புகளை அனுப்பி வருகிறது.
இதை ஒப்புக்கொள்பவர்களின் யூபிஐ ஐடிகள், பேடிஎம் இன் பார்ட்னர் வங்கிகளின் யூபிஐ ஐடிகளாக மாற்றப்படும். அதன் பிறகு, வாடிக்கையாளரின் யூபிஐ பரிவர்த்தனைகள், அந்தந்த வங்கிகளால் கையாளப்படும். மார்ச் 14 ஆம் தேதி, நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநராக (TPAP) தொடர ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் பேடிஎம் பல வங்கிகளின் மூலம் யூபிஐ சேவைகளை தொடர்ந்து வழங்கும்.
KYC விதிமுறைகளை மீறியதால் இந்திய ரிசர்வ் வங்கி, பிப்ரவரி 2024 ஆம் ஆண்டில், பேடிஎம் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் பிறகு பேடிஎம் வங்கியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் மற்றும் அடுத்தடுத்த அறிவிப்பால், மார்ச் மாதத்தில் UPI சந்தையில், பேடிஎம்-இன் பங்கு 9 சதவீதம் குறைந்துள்ளது. பிப்ரவரியில் 11 சதவீதம் சரிந்துள்ளது. இதன் மூலம், பேடிஎம்-இன் யூபிஐ, சந்தைப் பங்கு நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியில் பேடிஎம், அதன் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவைகளை வழங்க உறுதி அளித்துள்ளது. அதனால்தான் வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்த நான்கு முன்னணி வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications