டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான பேடிஎம் (Paytm) சமீபத்தில் ஒரு பிரச்னையையை எதிர்கொண்டுள்ளது. பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான (SEBI) ஜூலை 15-ஆம் தேதி பேடிஎம் நிறுவனத்துக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதற்குக் காரணம், நிறுவனத்தின் இயக்குழு, பங்குதாரர்கள் மற்றும் கணக்குத் தணிக்கை குழுவின் ஒப்புதல் இல்லாமல், அதே நிறுவனத்தின் ஒரு பிரிவுடன் பரிவர்த்தனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு.
பேடிஎம் நிறுவனம், அதே நிறுவனத்தின் ஒரு பிரிவுடன் பரிவர்த்தனை செய்ததில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைக்கு நிறுவனத்தின் இயக்கக் குழு, பங்குதாரர்கள் மற்றும் கணக்குத் தணிக்கை குழுவின் ஒப்புதல் பெறப்படவில்லை. இது நிதி சம்பந்தப்பட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் ஜூலை 15-ஆம் தேதி அன்று பேடிஎம் நிறுவனத்துக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.

செபியின் இந்த நடவடிக்கை காரணமாக, நிறுவனத்தின் பங்குகள் 2% வீழ்ச்சியடைந்து, செவ்வாய்க்கிழமை ரூ.459.75 என்ற விலையில் முடிவடைந்தது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க்கின் வணிக நடவடிக்கைகளை நிறுத்தியதில் இருந்து, ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (OCL) நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஜனவரியில் மாதத்தில் இருந்து வீழ்ச்சியடைய தொடங்கியது. பங்கின் விலை ரூ.761-இல் இருந்து கிட்டத்தட்ட 40% வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (OCL) பேடிஎம் நிறுவனத்தை இயக்குகின்ற பட்டியலிடப்பட்ட ஃபின்டெக் நிறுவனம் ஆகும். நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், செபி நிறுவனம், ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 2021-22 ஆம் ஆண்டில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியிடம் இருந்து ரூ.1,309 கோடி நிதியைப் பயன்படுத்தியதாகவும், OCL நிறுவனம், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரூ.1,086 கோடி மதிப்பிலான சேவைகளை வழங்கியதாகவும் தெரிவித்தது. இதில், ரூ.360 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கு இயக்குழு, பங்குதாரர்கள் தணிக்கை குழுவின் ஒப்புதல் இல்லை.
"மேற்கண்ட விதி மீறல்கள் மிகவும் தீவிரமான ஒன்றாகக் கருதப்படுகின்றன. எனவே, எதிர்காலத்தில் நீங்கள் கவனமாக இருக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் எச்சரிக்கப்படுகிறீர்கள். தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று செபி தனது கடிதத்தில் OCL நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.
செபியின் கடிதத்திற்கு பதிலளித்த நிறுவனம், பட்டியலிடல் விதிமுறைகள் அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும், காலப்போக்கில் இந்த விதிமுறைகளில் எந்தவித புதுப்பிப்புகள் செய்யப்பட்டாலும் அவற்றையும் கடைப்பிடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications