சென்னை: தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் பரவலாகி வருகிறது. இதனால் பலரும் பல்வேறு டிஜிட்டல் வாலட்-களை (Wallet) பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில், பேடிஎம் (Paytm) இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் வாலட் (Wallet) ஆகும். சில பயனர்கள் தங்கள் பேடிஎம் வாலட்-களை நீண்ட காலமாகப் பயன்படுத்தாமல் இருக்கலாம். இதுபோன்ற செயலிழந்த கணக்குகளை ஒழுங்குபடுத்துவதற்காக பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
செயலற்ற கணக்குகளை சீரமைக்க, பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் (PPBL) ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த பரிவர்த்தனையும் செய்யாத பூஜ்ஜிய பேலன்ஸ் கொண்ட வாலட்-களை மூடுவதாக அறிவித்துள்ளது. பேடிஎம், பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த அறிவிப்பு குறித்துத் தெரிவித்துள்ளது. மேலும் பயனர்களுக்கு 30 நாட்கள் காலக்கெடுவையும் வழங்கியுள்ளது. இது ஜூலை 20, 2024 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"கடந்த 1 ஆண்டு அல்லது அதற்கும் மேலாக எந்த பரிவர்த்தனையும் செய்யாத மற்றும் பூஜ்ஜிய பேலன்ஸ் வைத்திருக்கும் அனைத்து வாலட்களும் ஜூலை 20, 2024 முதல் மூடப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். பாதிக்கப்பட்ட அனைத்து பயனர்களுக்கும் தகவல் அனுப்பப்படும் மற்றும் பயனர்கள் தங்கள் வாலட்களை மூடுவதற்கு முன் 30 நாட்கள் காலக்கெடு வழங்கப்படும்," என்று PBBL தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜூன் 19, 2024 அன்று பதிவிட்டுள்ளது.
RBI கட்டுப்பாடுகள்: மார்ச் 15, 2024க்குப் பிறகு பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் அக்கவுண்ட்/வாலட்டைப் பயன்படுத்தி புதிய டெபாசிட்களை ஏற்கவோ அல்லது பரிவர்த்தனைகளை அனுமதிப்பதையோ கட்டுப்படுத்தும் உத்தரவை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டது.
மார்ச் 15, 2024-க்குப் பிறகு, பயனர்கள் தங்கள் வாலட்டில் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது. இருப்பினும், மார்ச் 15, 2024-க்குப் பிறகு கூட உங்கள் வாலட்டில் இருந்து பணத்தை திரும்பப் பெறுவதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இந்த அறிவிப்பு உங்கள் அக்கவுண்ட் மற்றும் வாலட்டில் உள்ள தற்போதைய பேலன்ஸ்-ஐ பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.
உங்கள் பேடிஎம் வாலட்டை எப்படி மூடுவது?
ஸ்டெப் 1: Paytm-ஐ திறந்து "Paytm Payments Bank Wallet" என்ற பகுதிக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "Need help with non-order related queries" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: "I want to close my Wallet" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் உங்கள் வாலட் 2 நாட்களுக்குள் மூடப்படும்.
உங்களுடைய பேடிஎம் வாலட்டை மூடுவதற்கு முன்பு, அதில் உள்ள பேலன்ஸ் அனைத்தையும் பயன்படுத்தியதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications