PIN நம்பர் இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட்.. எப்படி சாத்தியம்..? PAYTM-ல் புதிய சேவை..!

இன்று எல்லாமே டிஜிட்டல் மயம்தான். கையில் மொபைல் ஃபோன் இருந்தால் போதும், எங்கிருந்தும் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். இந்த அளவுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.

முதலில் எல்லாம் கடைக்கு செல்ல கையில் பணம் எடுத்துச் சென்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. PhonePe, Google pay, Paytm போன்ற UPI எனப்படும் ஆப்கள் மூலம் வணிக நிறுவனங்கள் முதல் பெட்டிக் கடைகள் வரை ஒரு ஸ்கேன் செய்தால் போதும் பணத்தை செலுத்திவிடலாம்.

ஆனால் அதற்கு வரம்புகளும் உண்டு, அதேசமயம் UPI அல்லாத டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணச் சேவையும் உண்டு. ஆனால் Paytm UPI lite மூலம் இனி மக்கள் ஒரே க்ளிக்கில் Pin நம்பர் எனப்படும் கடவுச் சொல் இல்லாமல் ரூ.200 முதல் ரூ.4000 வரை செலுத்தும் புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதென்ன Paytm Lite!

அதென்ன Paytm Lite!

Paytm UPI lite மூலம் அதன் பயனர்கள் இனி மின்னல் வேகத்தில் விரைவாக, அதேசமயம் எவ்வித தடையுமின்றி, பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கிறது பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓன்97 கம்யூனிகேஷன்ஸ்.

இதில் என்ன பயன்!

இதில் என்ன பயன்!

பொதுவாக UPI மூலம் பணம் செலுத்த வேண்டுமென்றால் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் முன் பயனர் அதற்கான 4 அல்லது 6 இலக்கக் கடவுச் சொல்லை உள்ளிட வேண்டும். அவசர தேவைக்காக பொதுவெளியில் பணம் செலுத்தும்போது சிலர் pin நம்பரை கவனிக்கவும் வாய்ப்புண்டு.

 பின் நம்பர்

பின் நம்பர்

இத்தகையச் சிரமங்களை தவிர்க்கவும், விரைவாக, மேலும் எளிமையான முறையில் மக்கள் பணத்தை பாதுகாப்பாக அனுப்பவும், இந்த paytm lite உதவியாக இருக்கும். paytm lite-ன் புதிய வசதிகள் மூலம் ஒருவர் சிறு வணிகங்களில் அதாவது டீ கடை, மளிகை கடை, ஸ்னாக்ஸ், தள்ளுவண்டி கடைகளில் ரூ.200 வரையில் பின் நம்பர் இல்லாமல் பணத்தை விரைவாகச் செலுத்த முடியும்.

இவ்வசதியை பெறுவது எப்படி?

இவ்வசதியை பெறுவது எப்படி?

தற்சமயத்திற்கு paytm யூபிஐ வாடிக்கையாளர்கள் மட்டுமே யூபிஐ லைட் கணக்குகளை அமைக்க முடியும். உங்கள் பேடிஎம் ஆப் -இல் யூபிஐ லைட்டிற்கான ஆதரவை முதலில் நீங்கள் அனுமதிக்க வேண்டும். அதன்பின் யூபிஐ லைட் வாலட்டில் உள்ள பணத்தை பின் நம்பர் இல்லாமல் செலுத்தாமல் உங்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாற்றலாம்.

4000 ரூபாய்

4000 ரூபாய்

ஆக யூபிஐ பயனர்கள் இனி வங்கிப் பரிவர்த்தனை எண்ணிக்கைகள் பற்றிய கவலையின்றி ஒரே நாளில் ரூ.4000 வரை பரிவர்த்தனைகளை Paytm upi lite மூலம் விரைவாகவும், சுலபமாகவும் மேற்கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+