ட்ஜிட்டல் நிதி சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனம் அதன் செப்டம்பர் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அதன் ஒருங்கிணைந்த நிகர நஷ்டம் 571 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 472.90 கோடி ரூபாயாக இருந்தது.
பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தினை எதிர்கொண்டு வரும் நிலையில், ஜூன் காலாண்டிலும் 644.4 கோடி ரூபாயாக நஷ்டம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருங்கிணைந்த வருவாய்
இதன் ஒருங்கிணைந்த வருவாய் விகிதம் இரண்டாவது காலாண்டில் 76% அதிகரித்து, 1914 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1086 கோடி ரூபாயாக இருந்தது. இது ஜூன் காலாண்டில் 1679.60 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடன் வளர்ச்சி
வணிக சந்தா வருவாய் வளர்ச்சி காரணமாக வருவாய் விகிதம் பெரியளவில் வளர்ச்சி கண்டுள்ளது. எங்கள் ஆப் மூலம் கடன்களை வழங்குவதில் ஏற்பட்ட வளர்ச்சி ஆகியவற்றால் கடன் வளர்ச்சி மேம்பட்டது. இதனால் வருவாயானது மேம்பட்டது. டிஜிட்டல் பேமெண்ட்ஸ் மற்றும் நிதிச் சேவைகள் காரணமாக வளர்ச்சி விகிதம் 62.4% உயர்ந்து, 596 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நிதி சேவைகள்
நிதி சேவைகள் மற்றும் பிற வணிகங்களின் வருவாய் கடந்த ஆண்டினை காட்டிலும் 293% அதிகரித்து, 349 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது மொத்த வருவாயில் 18% பங்கு வகிக்கிறது.
இதன் பேமெண்ட் சேவையானது கடந்த ஆண்டினை காட்டிலும் 56% அதிகரித்து, விரிவடைந்துள்ளது. இதன் மொத்த வணிக பயன்பாட்டாளர் (GMV) வளர்ச்சி கண்டுள்ளது.
கடன் எவ்வளவு?
இந்த நிறுவனம் கடன் கூட்டாளர்களுடன் இணைந்து 7,313 கோடி ரூபாயினை கொடுத்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 224% அதிகரித்தும், இது கடந்த காலாண்டினை காட்டிலும் 8% அதிகரித்தும் காணப்பட்டது.
பங்கு விலை நிலவரம்?
ஓன் 97 கம்யூனிகேஷன் பேடிஎம் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று சற்று அதிகரித்து, என்எஸ்இ-ல் 651.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே இதன் இன்றைய உச்சம் 659 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 645 ரூபாயாகும்.
இதே பிஎஸ்இ-யில் இப்பங்கின் விலையானது இன்று சற்று அதிகரித்து, 651.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே இதன் இன்றைய உச்சம் 658.75 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 645.75 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 1961.05 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 511 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications