நெதர்லாந்து நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான Prosus இன் பேமெண்ட் மற்றும் பின்டெக் சேவை நிறுவனமான PayU இந்தியா சுமார் 150 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. PayU நெதர்லாந்து நாட்டு நிறுவனமாக இருந்தாலும், அதன் இந்திய கிளையில் தான் தற்போது பணிநீக்க அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் PayU இந்திய கிளையின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இருந்து சுமார் 150 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில் தோராயமாக 6 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
வழக்கம் போல் இந்த நிறுவனமும் மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Naspers - Prosus
தென்னாப்பிரிக்கப் பன்னாட்டு நிறுவனமான Naspers இன் முதலீட்டுப் பிரிவான Prosus இந்தியாவில் ஸ்விக்கி, பைஜூஸ், மீஷோ, உட்படப் பல இந்தியாவின் நியூ ஏஜ் இண்டர்நெட் சேவை நிறுவனங்களில் பல முக்கியக் கட்டத்தில் மிகப்பெரிய முதலீட்டை செய்து பெரும் ஆதரவாக இருந்துள்ளது.
89 சந்தைகள்
1990 முதல் முதலீடு செய்து வரும் Naspers இன் முதலீட்டுப் பிரிவான Prosus சுமார் 89 சந்தைகளில் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக வளர்ச்சி அடைந்து வரும் சமூக வலைத்தளம், கேமிங், பின்டெக், எட்டெக், புட் டெலிவரி, ஈகாமர்ஸ் எனப் பல துறையில் முதலீடு செய்துள்ளது.
PayU இந்தியா
இந்த நிலையில் உலகளவில் பொருளாதார மந்த நிலை அதிகமாக இருக்கும் வேளையில் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது Naspers இன் முதலீட்டுப் பிரிவான Prosus கட்டுப்பாட்டில் இயங்கும் PayU இந்தியாவும் இதில் இணைந்துள்ளது.
பணிநீக்கம்
PayU இந்தியாவில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 150 ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பில் பல்வேறு அணிகளைச் சார்ந்து உள்ளது. இதில் முக்கியமாக 2019 ஆம் ஆண்டில் 70 மில்லியன் டாலருக்கு வாங்கிய டிஜிட்டல் பேமெண்ட் செக்யூரிட்டி மற்றும் மொபைல் பேமெண்ட் தொழில்நுட்ப நிறுவனமான Wibmo வர்த்தகப் பிரிவை தான் அதிகம் பாதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது..
3 பிரிவுகள்
Naspers இன் முதலீட்டுப் பிரிவான Prosus கட்டுப்பாட்டில் இயங்கும் PayU இந்தியாவின் கீழ் அனைத்து fintech வணிகங்களும் உள்ளது. இதன் படி PayU இந்தியா நிறுவனத்தில் கீழ் Wibmo, LazyPay மற்றும் Citrus Pay ஆகியவை உள்ளது.
பில்டெக் தோல்வி
அக்டோபர் மாதம் PayU இந்தியா நாட்டின் மிகப்பெரிய பேமெண்ட் கேட்வே-வாக இருக்கும் பில்டெக் தளத்தை மொத்தமாகச் சுமார் 4.7 பில்லியன் டாலருக்கு கைப்பற்ற திட்டமிட்டது, ஆனால் கடைசிக் கட்டத்தில் Prosus இந்த மாபெரும் கைப்பற்றல் திட்டத்தைக் கைவிட்டது. இந்தியாவில் மிகப்பெரிய பின்டெத் எகோசிஸ்டத்தை உருவாக்க நினைக்கும் Prosus இந்தக் கட்டமைப்பை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்லவும் திட்டமிட்டு வருகிறது.
வருவாய், லாபம்
2021-22 நிதியாண்டில், PayU Payments ஒருங்கிணைந்த வருவாய் வருடாந்திர அடிப்படையில் 50 சதவீதம் அதிகரித்து 2,130.2 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் 125.8 கோடி நிகர லாபத்தையும் ஈட்டியுள்ளது. சமீபத்தில் PayU இந்தியாவில் நைகா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரி அரவிந்த அகர்வால் இணைந்தார்.
நெதர்லாந்து
PayU நிறுவனம் நெதர்லாந்து நாட்டில் தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும் இந்தியாவில் தான் அதிக வர்த்தகத்தை வைத்துள்ளது. PayU இந்தியா நிறுவனத்தில் 150 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது போல் Rupeek-ல் 200 ஊழியர்களையும், OKCredit தளத்தில் 40 ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications