இந்தியாவில் ஃபின்டெக் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதில் பிபி ஃபின்டெக் (PB Fintech) லிமிடெட் நிறுவனம் இந்திய பங்குச்சந்தை மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் மிகச்சிறந்த முறையில் செயலாற்றும் ஃபின் டெக் நிறுவன பங்காக மாறி இருக்கிறது. பிபி ஃபின்டெக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2024 ஆம் ஆண்டில் 110 சதவிகிதம் என உயர்ந்துள்ளது. பிபி ஃபின்டெக் நிறுவனத்தை பொருத்தவரை இந்த நிறுவனம் காப்பீடுகளுக்கான தளமான பாலிசி பஜார் மற்றும் கடன் வழங்குநரான பைசா பஜார் ஆகிய தளங்களை நடத்தி வருகிறது. இந்த பிபி ஃபின் டெக் நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்டது.
அப்போது முதலே இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 130 சதவீதம் மேல் லாபத்தை ஈட்டி தந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதன் பங்கு மதிப்பு சுமார் 13 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 661 ரூபாய், 52 வார கால அதிகபட்ச மதிப்பு 1763 ரூபாய். ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் இதன் ஒரு பங்கு மதிப்பு 1726 ரூபாய் என வர்த்தகமானது.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 76,830 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவன பங்கினை பங்கில் 51 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வசம் இருக்கிறது. சில்லறை முதலீட்டாளர்கள் 32 சதவீத பங்குகளையும் மியூச்சுவல் பண்ட நிறுவனங்கள் 10 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளன.
இதனிடையே பிபி ஃபின்டெக் நிறுவன பங்குகளை வாங்கலாம் என எட்டு தரகு நிறுவனங்கள் மதிப்பீடு தந்துள்ளன. பிபி ஃபின்டெக் நிறுவன பங்கை பொறுத்தவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பு 52 நிறுவனங்கள் அடங்கிய ஃபின் டெக் குறியீட்டிலேயே அதிக லாபம் தந்த பங்காக இருப்பது என்டிடிவி பிராஃபிட் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் பாதுகாப்பற்ற கடன் வழங்கும் வணிகம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி இருப்பதாக பிபி ஃபின் டெக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். காப்பீடுகளுக்கான பாலிசி பஜார் தளம் 2008இல், கடன்களுக்கான பைசா பஜார் தளம் 2014லிலும் தொடங்கப்பட்டது. இது பாலிசி பஜார் மூலம் 4.4 கோடி இன்சூரன்ஸ் பாலிசிகளும், பைசா பஜார் மூலம் 3,140 கோடி ரூபாய் கடனும் வழங்கப்பட்டுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications