நீண்ட காலத்திற்குப் பின் உலகளவில் பர்சனல் கம்பியூட்டர் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக 2020ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் அதாவது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பர்சனல் கம்பியூட்டர் பிரிவில் 9 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
முதல் காலாண்டில் உலகளவில் வர்த்தகப் போக்குவரத்திற்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் 2வது காலாண்டில், தேவை அதிகரித்து விற்பனையும் அதிகரித்து 9 சதவீத வளர்ச்சி அடைய முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இந்த அதிரடி வளர்ச்சிக்கு கொரொனா முக்கியக் காரணம் எனவும் கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா-வால் மக்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் Work from home, வீட்டிலேயே பள்ளி கல்வி, வீட்டிலேயே பொழுதுபோக்கு என மாறிவிட்ட நிலையில் டெஸ்க்டாப், லேப்டாப், மற்றும் வொர்க்ஸ்டேஷன்-களின் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
7.29 கோடி விற்பனை
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் உலகம் முழுவதும் சுமார் 7.29 கோடி டெஸ்க்டாப், லேப்டாப், மற்றும் வொர்க்ஸ்டேஷன் விற்பனை ஆகியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் 2019ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையை விடவும் இந்த 3 மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பிசி-களை விட 1 சதவீதம் அதிகம்.
உற்பத்தி
மக்கள் மத்தியில் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் இத்தேவையைப் பூர்த்தி செய்யும் திட்டத்துடன் டெஸ்க்டாப், லேப்டாப், மற்றும் வொர்க்ஸ்டேஷன் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பணிகளைத் துரிதப்படுத்தி அதிகளவிலான தொகையை உற்பத்தி மற்றும் வர்த்தக விரிவாக்கத்திற்காக முதலீடு செய்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
2020ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் விற்பனையான 7.29 பர்சனல் கம்பியூட்டர்களில் 1.81 கோடி பிசிகளை ஹெச்பி விற்பனை செய்து சுமார் 24.8 சந்தையைக் கைப்பற்றி விற்பனையிலஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இதைதொடர்ந்து லெனோவோ 1.74 கோடி பிசி-களையும், டெல் 1.2 கோடி பிசி-களையும், ஆப்பிள் 53லட்சம், ஏசர் 49 லட்சம் பிசி-களை விற்பனை செய்யு அசத்தியுள்ளது.
மொபைல் ஆதிக்கம்
பிசி விற்பனையில் இக்காலகட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பா சந்தையில் சிறப்பான வளர்ச்சி அடைந்திருந்தாலும், ஆசிய சந்தையில் முதல் முறையாக அதிநவீன ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் முதல் தலைமுறையினர் இருக்கும் காரணத்தால் ஆசிய சந்தையில் பர்சனல் கம்பியூட்டர்களின் விற்பனை மிகப்பெரிய அளவில் இல்லை என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதுமட்டும் அல்லாமல் ஆசிய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் இதன் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications