பெங்களூரில் வாடகை வீடு தேடும் ஒவ்வொருவருக்கும் பல விசித்திரமான அனுபவங்கள் எப்போதும் காத்திருக்கும். பெங்களூரில் இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் வீடு தேடி வருவோரிடம் கேட்கப்படும் கேள்விகள், வைக்கப்படும் டிமாண்டுகள், போடப்படும் கண்டிஷன்கள் பலரையும் பயமுறுத்தியுள்ளது.
சொல்லப்போனால் இந்தியாவில் எங்குமே இல்லாத வகையில் பெங்களூர் வாடகை வீட்டு உரிமையாளர்கள் குறித்து தான் சமுக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்படுகிறது, இதனாலேயே பெங்களூர் வீட்டு உரிமையாளர் - வாடகை வீடு தேடுவோர் டாப்பிக் வருடம் முழுவதும் டிரெண்டிங்காகவே இருந்து வருகிறது.

இப்படி டிவிட்டரில் multibagg.ai என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனரான ஆதித்யா ஆனந்த் செய்த டிவிட்டர் பதிவு சுமார் 10 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. ஆதித்யா தனது டிவிட்டர் பதிவில், நானும் என் மனைவியும் பெங்களூரில் வாடகை வீடு தேடி சென்றோம்.
நாங்கள் பார்த்த ஒரு அப்பார்ட்மென்ட் எங்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. சரி வீட்டின் உரிமையாளர்களை சந்திக்கலாம் என முடிவு செய்தோம், அவருக்கு ஒரு 50 வயது இருக்கும், IRS அதிகாரி ஆவார்.
வழக்கம் போல் அனைத்து வீடு உரிமையாளர்களை போல் எங்களை பற்றி விசாரித்தார். நான் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறேன் என சொன்னதும் நேரடியாக எங்களுக்கு வீடு இல்லை என வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார்.
ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் நிலையான வருமானம் இருக்காது, ரெகுலர் இன்கம் கொண்ட நபர்களுக்கு தான் வீட்டை கொடுப்பேன் என மறுத்துவிட்டார்.
எங்களுக்கு வீடு மிகவும் பிடித்துப்போனால், என்னுடயை மனைவி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், வாடகை தருவதில் பிரச்சனை வரும் என நீங்கள் நினைத்தால் ஒரு காலாண்டுக்கான வாடகையை முன்கூட்டியே வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் கூறினோம்.
ஆனாலும் மறுத்துவிட்டார்.
நாங்கள் இருவரும் ஐஐடி பட்டதாரிகள், என்னுடைய மனைவியின் வேலை, சம்பளம் ஆகிய இந்தியாவில் டாப் 0.1 சதவீத பட்டியலுக்குள் இருப்போம்.
ஆனாலும் என்னுடைய ஸ்டார்ட்அப் பாதையின் காரணமாக எங்களுக்கு பெங்களூரில் வீடு கிடைக்கவில்லை.
மக்கள் தொழில்முனைவோரை தியரியில் தான் ஊக்குவிக்கிறார்கள், நிஜத்தில் இப்படியில்லை என சோகமாக பதிவை எடுத்தார்.
மேலும் ஆதித்யா ஆனந்த் தனது பதிவில் சில தகாத வார்த்தைகளை பயன்படுத்திய காரணத்தால் கமெண்ட் செக்ஷனில் கலவையான கருத்துக்கள் நிரம்பியது.


Click it and Unblock the Notifications