பெங்களூரில் வாடகை வீடு தேடி பிடிப்பது என்பது ஒரு எம்என்சி நிறுவனத்தில் வேலை வாங்குவது, பிள்ளைகளுக்கு பள்ளியில் சீட்டு கேட்பது விடவும் கடுமையான விஷயமாக மாற்றி வருகிறது. வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வீட்டை தேடி வருபவர்களிடம் பணியாற்றும் நிறுவனத்தின் ஐடி கார்டு முதல் லின்கிடுஇந் ப்ரொபைல், குழந்தைகள் மார்க் ஷீட் வரையில் டிசைன் டிசைனாக ஆவணங்களை கேட்க துவங்கியுள்ளனர்.
இதோடு நிற்கிறதா என்றால் அதுதான் இல்லை, வீட்டு உரிமையாளர்கள் குடியிருக்க வருபவர்களை வீடியோ கான்பிரென்ஸ் வாயிலாகவும், நேரடியாகவும் சந்தித்து இண்டர்வியூவ் எடுத்து வருகின்றனர். ஏற்கனவே பெங்களூரில் வாடகை வீடுகளுக்கு அதிகப்படியான பஞ்சம் இருக்கும் வேளையில் வீட்டு உரிமையாளர்களின் நெருக்கடி பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

இந்த நிலையில் டிவிட்டரில் இஷு என்பவர் சமீபத்தில் செய்த பதிவை பார்க்கும் போது ஒருபக்கம் அதிர்ச்சி அளித்தாலும், மறுப்புறம் சிரிப்பு வருகிறது. இஷு தனது வாடகை வீடு தேடும் பயணத்தில் ஒரு வீட்டு உரிமையாளர் தனது வீட்டை வாடகைக்கு விடுவதாக ஒப்புதல் அளிப்பதை, நிறுவனத்தில் பணியில் தேர்வாகிவிட்டால் கொடுக்கப்படும் ஆஃபர் லெட்டர் போல் கொடுத்துள்ளது நெட்டிசன்களை ஈர்த்துள்ளது.

இஷு வீட்டு உரிமையாளர் அனுப்பிய மெசேஜ்-ஐ ஸ்கிரீன்ஷாட் எடுத்து டிவிட்டரில் பதிவிட்டார், இதில் வணக்கம். அன்று உங்கள் இருவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. நமது சந்திப்பின் போது நான் குறிப்பிட்டது போல், வீட்டுக்கு யார் விருப்பம் தெரிவிக்கிறார்களோ அவர்களை நான் நேரில் சந்தித்து பேசி வருகிறேன். ஆனால் எல்லோரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை, இதனால் இதுவரையில் சந்தித்த நபர்களில் யார் வீட்டை சிறப்பாகப் மதித்து, பராமரிப்பார்கள் என்ற யோசிந்து இறுதிப்பட்டியலை உருவாக்கியதில், உங்கள் இருவருக்கும் முதல் ஆஃப்ரை வழங்க விரும்புகிறேன். என குறிப்பிட்டு இருந்தது.
இதை இஷு வீட்டு ஓனர் உடனான இண்டர்வியூவ்-ல் நாங்ள் தேர்வானது எங்களுக்கு பீக்பெங்களூர் மொமெண்ட் ஆக மாறியது என்று தெரிவித்தார். இதில் பீக்பெங்களூர் என்பதை ஹேஷ்டேக் உடன் பதிவிட்டதால் கடந்த சில நாட்களில் இவருடைய பதிவை 18100 பேருக்கும் அதிகமாக பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications