பெங்களூரு, இந்தியாவின் ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் துறைக்கான தலைநகரமாக இருப்பதால், உலகம் முழுவதும் இருக்கும் தொழில்நுட்ப துறை வல்லுனர்களுக்கு நெட்வொர்க்கிங் செய்ய சிறந்த இடமாகப் பெங்களூர் காஃபி ஷாப் உருவெடுத்து வருகிறது. ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட்-அப்கள் மற்றும் உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்கள் பெங்களூரில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டெக் நிறுவனங்களின், நிறுவனர்கள், தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் பிற நிர்வாகிகளின் சந்திப்புகளுக்கான ஹாட்ஸ்பாட் -ஆக காஃபி ஷாப் மாறி வருகிறது.
இந்த வாரம் பெங்களூருவில் ஒரு காபி ஷாப்பில் இந்தியாவின் மூன்று முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் தற்செயாக சந்தித்துக் கொண்டது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால், அன்அகாடமி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கௌரவ் முன்ஜால் மற்றும் ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜேதி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அன்று அரக்கு காபியில் சந்தித்துக் கொண்டனர்.
இதனை அங்கு சென்றிருந்த ஒரு வாடிக்கையாளர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இஷான் சுக்குல் என்பவர் ஜூலை 14 ஆம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில், "அரக்கு காபி இன்று அனல் பறக்கிறது: 3 பெரிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் (ஸ்விக்கி, அன்அகடமி, ஓலா) மற்றும் நான் (ஒரு சாதாரண வாடிக்கையாளர்)" என்று பதிவிட்டார்.

இதை தொடர்ந்து "பீக் பெங்களூரு" என்ற பேமஸ் டிவிட்டர் ஹேண்டில் யூனிகார்ன் (Unicorn) ஈமோஜியை பதிவிட்டு இதை மேலும் வைரலாக்கியது. யூனிகார்ன் என்பது ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைக் குறிக்கும் ஒரு சொல்.
இஷான் சுக்குல் 3 சிஇஓ-க்களின் புகைப்படங்களை எடுக்கவில்லை என்றாலும், அவர்களது சந்திப்பின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
அன்அகடமியின் கௌரவ் முன்ஜால் ஓலாவின் பவிஷ் அகர்வாலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் X -இல் பகிர்ந்தார். இருப்பினும், ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜேதி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கவில்லை.


Click it and Unblock the Notifications